பெரும்பாலானோர் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்றுதான் டீ. பலரும் தங்களது நாளை ஒரு கப் டீயுடன் தான் தொடங்க விரும்புவார்கள். டீ இல்லாமல் பலரது நாட்களும் கழிவதில்லை.
25
Tea Strainer Cleaning Hacks In Tamil
டீயில் மசிலா டீ, இஞ்சி டீ, துளசி டீ, கிரீன் டீ, ஹெர்பல் டீ என பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளன. டீயை நாம் தயாரித்த பிறகு அதை வடிகட்டி குடிப்போம். சில வீடுகளில் அடிக்கடி டீ போட்டு குடிப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் டீ வடிகட்டியை முறையாக சுத்தம் செய்ய முடியாமல் போய்விடும்.
இதனால் டீ வடிகட்டியின் துளைகளில் டீ இலைத் துகள்கள் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக டீயை ஃபில்டர் பண்ணுவதில் சிரமம் ஏற்படும். இதுதவிர அதை கழுவுவதற்கும் மிகவும் கடினமாகவும் இருக்கும். முக்கியமாக இதுபோன்ற அழுக்கான வடிகட்டியில் டீயை வடிக்கட்டி குடிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கும் விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில் அழுக்கு படிந்திருக்கும் டீ வடிகட்டியை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் அழுக்கான டீ வடிகட்டியை போட்டு சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதை வெளியில் எடுத்து ஒரு மெல்லிய பிரஷ்சால் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால் உங்களது டீ வடிகட்டியானது அடைப்புகள் ஏதுமின்றி பளபளனு இருக்கும்.
சூடான நீர்
சூடான நீரில் கறை படிந்து இருக்கும் டீ வடிகட்டியை சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு ஒரு பிரஷ்சால் மெல்ல துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கவும். இதனால் தீ வடிகட்டி துவாரங்களில் ஒட்டி இருக்கும் இலைகள் நீங்கி புதியது போல் இருக்கும்.
55
Tea Strainer Cleaning Hacks In Tamil
எலுமிச்சம் பழம்
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதில் ஒரு துண்டை எடுத்து டீ வடிகட்டியின் துவாரங்களில் நன்கு தேய்க்க வேண்டும். பிறகு ஐந்து அப்படியே வைத்துவிட்டு பின் தண்ணீரில் நன்கு கழுவி எடுத்தால் போதும் டீ ஃபில்டர் மின்னும்.
பாத்திரம் கழுவும் சோப்பு & சூடான நீர்
ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாத்திரம் கழுவும் சோப்பை போடவும். இப்போது அதில் டீ வடிகட்டியை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு அதை வெளியில் எடுத்து டூத் பிரஷ் கொண்டு மெல்லமாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவி பார்த்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.