Published : Nov 02, 2024, 09:26 AM ISTUpdated : Nov 02, 2024, 09:31 AM IST
Avoid Mushrooms In Rainy Season : நீங்கள் மழைக்காலத்தில் காளான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
மழைக்காலம் என்பது கோடை வெப்பத்திலிருந்து நம்மை தணிக்க உதவும் ஒரு அற்புதமான சீசன் ஆகும். இருந்தபோதிலும் இந்த பருவத்தில் ஈரப்பதம் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுக்கள் பரவும். முக்கியமாக நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த பருவத்தில் நோய்கள் மற்றும் பாக்கியக்களால் அதிகம் பாதிக்கப்படுவோம்.
24
Avoid Mushrooms In Rainy Season In Tamil
இதுதவிர இந்த பருவத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த பருவத்தில் ஃபுட் பாய்சன் முதல் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் வரை என பல உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுகளை சாப்பிடுவதுதான். அந்த வகையில் இந்த பருவத்தில் காளான் சாப்பிடுவது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. அது ஏன் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காளானை ஒவ்வொரு நபரும் அதை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் வைட்டமின் டி காணப்படும் ஒரே காய்கறி காளான் தான். இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் பி-யும் உள்ளது. இதை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர காளானில் பொட்டாசியம் நல்ல அளவில் உள்ளது. அதுபோல காளான் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும். காளானில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது இதய நோய், அல்சமைர், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.
மழைக்காலத்தில் காளான் ஏன் சாப்பிடக்கூடாது என்ற கேள்வி பெரும்பாலானோரின் மனதில் இருக்கும். உண்மையில் காளான் ஈரமான மண்ணில் தான் வளரும். இந்த பருவத்தில் ஏற்கனவே மழை பெய்யும் போது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் மண்ணில் அதிகம் காணப்படும். இவை காளானுக்குள் செல்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் மழைக்காலத்தில் காளானை சாப்பிடும் நபர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகம் உள்ளன. இதன் காரணமாக தான் மழைக்காலத்தில் காளான் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதற்கு முக்கிய காரணம் இதுவே.
குறிப்பு : மழைக்காலத்தில் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்பினால் மழைக்கால முடியும் வரை காளான் சாப்பிடுவதை தவிர்க்கவும்.