தீபாவளிக்கு போட்ட ரங்கோலி கறை திட்டு திட்டா இருக்கா? எளிமையாக போறதுக்கு இதை பண்ணுங்க!!

Published : Nov 02, 2024, 08:20 AM ISTUpdated : Nov 02, 2024, 08:27 AM IST

After Diwali Cleaning Tips : தீபாவளிக்கு பிறகு தரையில் இருக்கும் ரங்கோலி கறைகளை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
தீபாவளிக்கு போட்ட ரங்கோலி கறை திட்டு திட்டா இருக்கா? எளிமையாக போறதுக்கு இதை பண்ணுங்க!!
After Diwali Cleaning Tips In Tamil

தீபாவளி நாளில் வீட்டின் தரையில் வண்ணமயமான ரங்கோலி போடுவது வீட்டு அலங்காரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, இது மத ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

25
After Diwali Cleaning Tips In Tamil

ஆனால் தீபாவளிக்குப் பிறகு தரையில் போட்ட ரங்கோலியை சுத்தம் செய்வது மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனென்றால், அவற்றை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், அவற்றின் நிறங்கள் தரையில் அப்படியே ஒட்டிக்கொண்டு இருக்கும். பல நாட்கள் ஆனாலும் அவை அப்படியே காணப்படும். மேலும் ரங்கோலி போட்ட இடத்தை மட்டும் பார்ப்பதற்கு மோசமாகவே இருக்கும். 

35
After Diwali Cleaning Tips In Tamil

அந்தவகையில் இந்த தீபாவளிக்கும் தரையில் போட்ட ரங்கோலியை சுத்தம் செய்வதில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் 
என்றால், கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால், உங்களுக்காக சில எளிய குறிப்புகள் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றுவதன் மூலம் தரையில் இருக்கும் ரங்கோலியின் கறையை மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடலாம். அவை..

45
After Diwali Cleaning Tips In Tamil

தரையில் உள்ள ரங்கோலி கறைகளை சுத்தம் செய்வது எப்படி?

தண்ணீர் மற்றும் சோப்பு கரைசல்

இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் சோப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரில் ஒரு பஞ்சு அல்லது சுத்தமான துணியை நனைத்து, பின் ரங்கோலியின் கறை மீது தடவவும். 
லேசாக தேய்த்து பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். அவ்வளவுதான் கறைகள் இப்போது மறைந்துவிடும்.

வினிகர்

தரையில் பூத்த ரங்கோலி ரொம்பவே வலுவாக இருந்தால், தண்ணீர் மற்றும் வினிகரை நன்றாக கலந்து அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இதை கரையின் மீது தெளித்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் கடற்பாசி கொண்டு தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை கழுவி விடுங்கள்

55
After Diwali Cleaning Tips In Tamil

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

தீபாவளிக்கு போட்ட ரங்கோலி கரை இன்னும் தரையில் ஒட்டிக் கொண்டிருந்தால், ஒரு ஸ்பூன் சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை கறையின் மீது தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை கழுவினால், கறையின் எந்த தடயமும் தெரியாது.

சோப்பு தூள்

தீபாவளிக்கு தரையில் போட்ட ரங்கோலி கரையைப் போக்க சிறிது சோப்பு தூள் பயன்படுத்தவும். சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து கறையின் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து தேய்த்து தண்ணீரில் சுத்தம் செய்தால் போதும். கறை நீங்கிவிடும்.

மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும். தீபாவளிக்கு தரையில் போட்ட ரங்கோலியின் கறையை மிகவும் எளிதாக சுத்தம் செய்து விடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories