உங்க பார்ட்னருக்கு 'இந்த' விஷயத்தை கொடுக்கலன்னா.. உறவு சீக்கிரமே 'வீக்' ஆகிடும்!! 

First Published | Nov 1, 2024, 6:51 PM IST

Relationship Tips : அலுவலக வேலை, வீட்டு வேலை என வேலைகளில் மூழ்கி கிடந்தால் வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவழிக்க முடியாது. அதை எப்படி சரி செய்யலாம் என இங்கு காணலாம். 

How to Make Time for Your Partner In Tamil

கணவனும் மனைவியும் தங்களுக்கென நேரத்தை ஒதுக்கினால் தான் அவர்களுக்குள் நெருக்கம் உண்டாகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வார்கள். இருவரில் ஒருவர் தன்னை தூரமாக வைத்திருந்தாலும், நேரம் செலவிடாவிட்டாலும் அவர்களுக்குள் இடைவெளி ஏற்படும். ஒரு உறவு உறுதியாக இருக்க தினமும் பேசுவது கட்டாயம் இல்லை. ஆனால் தினம் பேசாவிட்டாலும் அந்த உறவு உறுதியாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்க வேண்டும். 

How to Make Time for Your Partner In Tamil

ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கும்போது அதிகமாக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருப்பீர்கள்.    ஆனால் மனைவியான பின்னர் இதை பலர் கடைபிடிப்பது இல்லை.  இதனால் கணவன் - மனைவிக்குள் நிறைய பிரச்சனைகள் வரும். இது காதல் திருமணத்தில் மட்டுமில்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் நடக்கும். இதற்கு திருமண பொறுப்புகள் ஒரு காரணம். வீட்டு வேலை, அலுவலக வேலை என கடமைகள் துரத்துவதால் துணையுடன் நேரம் செலவிட முடியாமல் இருக்கும். பிஸியாக இருந்தாலும் எப்படி குறிப்பிட்ட நேரத்தை உங்கள் துணையுடன் செலவழிக்கலாம் என இங்கு காணலாம். 

இதையும் படிங்க:  எந்த கணவரும் தன் மனைவியிடம் ஒருபோதும் சொல்லக் கூடாத '3' விஷயங்கள்!! 

Latest Videos


How to Make Time for Your Partner In Tamil

இரவில் செலவிடுங்கள்:

ஒவ்வொரு நாள் இரவிலும் தூங்கும் முன் இருவரும் கொஞ்ச நேரம் உரையாட வேண்டும். மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து முந்தின நாள் இரவில் பேசி முடிவெடுங்கள். இப்படி பேசி கொள்வதால் உங்களிடையே பரஸ்பர புரிதல் வரும். 
 
சீக்கிரம் எழுங்கள்: 

தினமும் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். கணவன் மனைவி இருவருமே அதிகாலை  ஒரே நேரத்தில்  எழுந்து கொள்வதில்லை. இப்படி செய்வதால் இருவரும் பேச நேரம் ஒதுக்க முடியாது. இருவரும் ஒரே நேரம் எழுவதால் வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியும். வழக்கமான நேரத்தை விட முன்கூட்டி எழுந்து கொள்வதால் இருவருக்கும் நேரம் ஒதுக்க வாய்ப்பாக அமையும். 

How to Make Time for Your Partner In Tamil

நேரத்தை அமைத்து கொள்ளுங்கள்:

பகலில் உங்களுடைய வேலை நேரத்திலும் முடிந்தளவு நேரம் ஒதுக்கி உங்கள் துணையுடன் பேச முயற்சி செய்ய வேண்டும். இப்படி செய்வது நீங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வெளிப்படையாக காட்டும். உங்களுடைய அலுவலகம் அருகாமையில் இருந்தால் மதிய உணவை கூட இணைந்து உண்ண முயற்சி செய்யலாம். தூரம் எனில் அந்த நேரத்தில் போன், மெடீசஜ் செய்யலாம். 

சமூக செயல்பாடு:

உங்கள் இருவருக்கும் விருப்பமான பொதுவான விஷயங்களை செய்வது உங்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும். வீட்டை தவிர்த்து பொதுவெளியில் உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் இணைந்து செயல்படுவது உங்களுடைய பொறுப்புணர்வை உங்கள் துணைக்கு வெளிப்படுத்தும். 

How to Make Time for Your Partner In Tamil

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்களில் எப்போதும் இணைந்திருக்க முயற்சி செய்யுங்கள். அந்த நாட்களில் வீட்டு வேலைகளை இணைந்து செய்யுங்கள். இதனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும். எப்போதும் இருவரும் நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். சமூக வலைதளங்களில் நேரம் செலவிட்டு உங்களுடைய நிஜ வாழ்க்கையை கோட்டை விடாதீர்கள். இருவரும் இணைந்து நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க: உங்களுக்கு ஏற்ற 'வாழ்க்கைத் துணையை' எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா? 

click me!