மழைக்காலத்தில் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க டிப்ஸ்:
வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல்
தலைமுடியில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க, வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல் பெரிதும் உதவும். கற்றாழை ஜெல் உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெந்தயம் தலைமுடியை சுத்தம் செய்யும் மற்றும் நோய் தொற்றை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இவற்றைக் கொண்டு பேஸ்ட் தயாரிக்க 3 ஸ்பூன் வெந்தயம் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சுமார் 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
துளசி நீர்
மழைக்காலத்தில் கூந்தலில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க துளசி நீரை பயன்படுத்தவும். துளசி நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்று நோயை நீக்குகிறது. இதற்கு கொதிக்கும் நீரில் துளசி இலையை போட்டு, பிறகு மிதமான சூட்டில் இருக்கும்போது உங்கள் தலைமுடியை கழுவவும். இதனால் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் நீங்கும்.