குழந்தைகள் நல்ல படிக்க பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்:
வீட்டில் படிப்பதற்கு தனி இடம்
உங்களது வீட்டில் ஹால், படுக்கையறை, சமையலறை என இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு என ஒரு அறை அல்லது இடம் ஒதுக்கி இருக்கிறீர்களா? இல்லையெனில் இப்போது உங்கள் பிள்ளைக்கு அத்தகைய இடத்தை அமைத்துக் கொடுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் படிக்கும் போது எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது.
நீங்களே டெஸ்ட் வைக்கலாம்
உங்கள் குழந்தைக்கு அவர்கள் எளிதாக செய்யக்கூடிய வகையில் டெஸ்ட் வைக்கலாம். பெரிய டாஸ் கொடுத்து குழந்தைகளை குழப்ப வேண்டாம். இதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதுபோல குழந்தைகளுக்கு திட்டம் ஏதேனும் இருந்தால் அதை வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கவும். அதாவது எழுதுவது, ப்ராஜெக்ட் செய்வது, இது போன்ற பல. மேலும் இவற்றுக்கு நீங்கள் ஒரு கால கெடுவை அமைத்துக் கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு உத்வேகத்தை அளிக்கிறது.