மழைக்காலத்தில் நடைப்பயிற்சிக்கு பதிலாக வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்:
படிக்கட்டு ஏறுவது
மழையின் காரணமாக வெளியே சென்று நடை பயிற்சி செய்ய முடியாமல் போனால், வீட்டிலேயே படிக்கட்டு ஏறும் பயிற்சியை செய்யுங்கள். படிக்கட்டு ஏறுவதால் இது ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கால் தசைகள் வலுப்படும். இந்த பயிற்சியை நீங்கள் செய்யும் போது உங்களது வேகத்தை அதிகரித்தால் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
சைக்கிள் ஓட்டுதல்
நடைபயிற்சி செய்வதன் மூலம் உணவை எளிதில் ஜீரணமாக்க முடியும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் மழை காரணங்களால் உங்களால் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போனால், உட்புற சைக்கிள் ஓட்டலாம். இது உங்களுக்கு சிறந்த கார்டியோ பயிற்சியாகும்.