வாழைப்பழம் சாப்பிடுவதால் இருமல், சளி வருமா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சளி, இருமல் நம்மைச் சுற்றியுள்ள காற்றில் உள்ள வைரஸ்களால் வருகிறது, வாழைப்பழத்தால் அல்ல. சுற்றுச்சூழலில் உள்ள வைரஸால் வரும் சளிக்கு வாழைப்பழத்தை காரணம் காட்டக்கூடாது. மேலும், வாழைப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்காது.
ஆனால், சளி இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில், சளி, இருமல் இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது சளியின் உற்பத்தியை அதிகரிக்கும். ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். அதுவும் மிகக் குறைவாகவே இருக்கும்.
சளி பிடித்திருக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டாலும், அது பெரிய அளவில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. ஆனால், ஒன்றும் ஆகாது என்று அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும், இந்த பழத்தால் நமக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது. ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆற்றலை அதிகரிக்கவும், செரிமானத்திற்கும் உதவுகின்றன.