Water Bottle Cleaning Tips
தினமும் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் அழுக்கு பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடித்தால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். வாட்டர் பாட்டிலை நீங்கள் அதிகமாக பயன்படுத்தினால் அதை கண்டிப்பாக இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள். ஒருவேளை நீங்கள் அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதன் உள்ளே பாக்டீரியாக்கள் வளரும். இதனால் நோய்கள் தான் உருவாகும்.
Water Bottle Cleaning Tips
வாட்டர் பாட்டிலை சுலபமாக சுத்தம் செய்ய டிப்ஸ்:
சூடான நீர் & பேக்கிங் சோடா
வாட்டர் பாட்டில் சுத்தம் செய்ய சூடான நீர் மற்றும் பேக்கிங் சோடா உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான நீர் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். இப்போது அந்த தண்ணீரில் வாட்டர் பாட்டிலை போட்டு சுமார் 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு கிளினிக் ஸ்கிரிப் கொண்டு சுத்தம் செய்யவும்.
வினிகர் & சூடான தண்ணீர்
வாட்டர் பாட்டிலில் இருக்கும் பிடிவாதமான கறைகளை அகற்ற வினிகர் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து அதில் வினிகர் சேர்க்கவும். அந்த கரைசலை பாட்டில்கள் மற்றும் மூடியின் மீது தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவுங்கள்.
இதையும் படிங்க:இட்லி 1 ரூபாய்.. குடிநீர் பாட்டில் ரூ5 .. கிளாம்பாக்கம் மட்டுமல்ல.. தமிழ்நாடு முழுவதும்.! பாஜக கொடுத்த ஐடியா..
Water Bottle Cleaning Tips
பேக்கிங் சோடா & எலுமிச்சை சாறு
இதற்கு ஒரு பாத்திரத்தில் சம அளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் சூடான நீர் சேர்த்து அந்த கரைசலில் பாட்டில்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு டிஷ்வாஷ் மூலம் கழுவுங்கள். பாட்டிலை கழுவி பிறகு அதை வெயிலில் காய வைத்து பிறகு பயன்படுத்துங்கள்.
எலுமிச்சை பழம் & வேம்பு தண்ணீர்
இதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேப்பிலை மற்றும் எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும். பிறகு இதை நன்கு கொதிக்க வைக்கவும். இந்த சூடான தண்ணீரில் கண்ணாடி மட்டும் ஸ்டீல் பாட்டில்களை 20 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன்பிறகு எப்போதும் போல பாட்டிலை சோப்பு போட்டு கழுவுங்கள். இப்படி செய்தால் கிருமிகள் அழிக்கப்படும்.