ரிக்கெட்ஸ்
ரிக்கெட்ஸ் என்பது வைட்டமின் டி கால்சியம் அல்லது பாஸ்பரஸ் குறைபாட்டால் ஏற்படும் ஒரு வகையான நிலையாகும். இது குழந்தைகளின் எலும்புகள் பலவீனப்படுத்தும். இது குழந்தைகள் தாமதமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.
ஹைபோ தைராய்டிசம்
தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாததால் , தசை பலவீன மற்றும் மோசமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் இது குழந்தைகள் நடப்பதற்கு தாமதப்படுத்தும்.
குறைமாத பிறப்பு
குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் உடலும் மூளையும் இன்னும் முழுமையாகாமல் வளர்ச்சி அடையாமல் இருப்பதால் அவர்கள் நடப்பதற்கு தாமதமாகும்.