பிறந்த குழந்தைக்கு எப்போது ஆயில் மசாஜ் செய்ய ஸ்டார்ட் பண்ணலாம்?!
Oil Massage For Newborn Baby : பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது ரொம்பவே நல்லது. ஆனால் அதை எப்போதிருந்து தொடங்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது பல நன்மைகள் வழங்கும். அப்படியானால் பிறந்து எவ்வளவு காலம் கழித்து ஆயில் மசாஜ் செய்வது நல்லது என்று தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
குழந்தை பிறந்து சில வாரங்களுக்குப் பிறகு, தொப்புள் கொடியின் தண்டு விழுவதற்கு முன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது காயங்களை ஏற்படுத்தும்.
தொப்புள் கொடியின் தண்டு விழுந்து, தொப்புள் பகுதி முழுவதுமாக குணமாகும் வரை, ஆயில் மசாஜ் செய்வது நல்லதல்ல. இல்லையெனில், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உணர்திறன் வாய்ந்த தோல் இருப்பதால், வாசனை உள்ள எண்ணெய், குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, வாசனை இல்லாத எண்ணையை பயன்படுத்துங்கள்.
முக்கியமாக உங்கள் குழந்தைகளின் தோல்வகைக்கு ஏற்ப எண்ணெயை பயன்படுத்துங்கள். இல்லையெனில், அது அவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
நீங்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய விரும்பினால் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணையை பயன்படுத்துங்கள். ஏனெனில், இதில் இருக்கும் குளிர் பண்புகள் குழந்தைகளின் சருமத்திற்கு இயற்கையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது, வயிற்றை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். எதிரெதிர் திசைக்கு பதிலாக கடிகார திசையில் செய்யுங்கள்.