மழைக்காலத்தில் ஒவ்வாமை பிரச்சினையை தடுக்க உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
மஞ்சள்
மஞ்சள் சமையலறையில் காணப்படும் ஒரு பொதுவான மசாலா பொருள். இதில் குர்மின், அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே மழைக்காலத்தில் இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
பூண்டு
பூண்டில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆண்டி வைரஸ் பண்புகள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுதவிர, தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும், அலர்ஜி பிரச்சினைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இது சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றுக்களையும் குறைக்கும். எனவே, மழைக்காலத்தில் சமைக்கும் உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.