தினமும் முட்டை சாப்பிடுங்க.. ஆனா  இந்த '6' உணவு கூட மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!.. ஏன் தெரியுமா?

First Published | Oct 31, 2024, 9:41 AM IST

Foods To Avoid Eating With Eggs : முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இந்த 6 உணவுப் பொருட்களுடன் முட்டையை சாப்பிட்டால் அவை நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Foods To Avoid Eating With Eggs In Tamil

தினமும் மூட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, புரதம், இரும்பு, அமினோ அமிலங்கள், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் அத்தியாவசிய நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன. முட்டை ஆரோக்கியத்திற்கு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இதுவே.

Foods To Avoid Eating With Eggs In Tamil

முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இந்த 6 உணவுப் பொருட்களுடன் முட்டையை சாப்பிட்டால் அவை நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? முட்டையுடன் எந்தெந்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தினமும் முட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா?

Tap to resize

Foods To Avoid Eating With Eggs In Tamil

முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாத 6 உணவுப் பொருட்கள்:

1. சர்க்கரை

முட்டையுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் முட்டையும் மற்றும் சர்க்கரையிலிருந்து வெளியாகும் அமினோ அமிலங்கள் உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடலில் ரத்த உறைவு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

2. சோயா பால்

சோயாபாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சோயாபாலுடன் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் அது நன்மைக்கு பதிலாக பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Foods To Avoid Eating With Eggs In Tamil

3. டீ, காபி

முட்டை சாப்பிடும் போது டீ அல்லது காபி குடித்தால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் தான் முட்டையுடன் டீ அல்லது காபியை சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துவதற்கு இதுவே காரணம்.

4. வாழைப்பழம்

முட்டை மற்றும் வாழைப்பழம் இவை இரண்டையும் தனித்தனியாக சாப்பிடும் போது எந்தவித பிரச்சனையும் இல்லை. அவை  ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதுவே நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். இதனால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க:  என்னது முட்டையில் டூப்ளிகேட்டா? போலியான முட்டையை எப்படி கண்டுபிடிக்கிறது? இதோ டிப்ஸ் பாருங்க!

Foods To Avoid Eating With Eggs In Tamil

5. புளிப்பு பொருட்கள்

நீங்கள் முட்டை சாப்பிடும் போது எக்காரணம் கொண்டும் புளிப்பு பொருட்களை அதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். அதையும் மீறி நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு மாரடைப்பு மற்றும் பல தீவிர இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

6. இறைச்சி

முட்டை மற்றும் இறச்சியில் கூடுதல் கொழுப்பு மற்றும் புரதங்கள் இருப்பதால், இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் ஜீரணிப்பதை கடினமாகிறது. மேலும் சோர்வாகவும், சோம்பலாகவும் உணர வைக்கும். எனவே முட்டையுடன் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Latest Videos

click me!