வேகமாக வாக்கிங் போறது ரொம்ப நல்லது.. ஆனா இந்த தவறுகளை பண்ணிட்டா மொத்தமும் வேஸ்ட்..

First Published | Oct 31, 2024, 8:38 AM IST

Brisk Walking Mistakes  : விறுவிறுப்பாக நடப்பது நல்லது தான். ஆனால் அப்படி நடக்கும் போது சில தவறுகளை செய்யவே கூடாது. இதனால் முழு பலனையும் பெற முடியாது. அது எந்த மாதிரி தவறுகள் என்று இங்கு பார்க்கலாம்.

Brisk Walking Mistakes In Tamil

தினமும் காலை நாம் நடப்பயிற்சி செய்வது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிதான வழிகளில் ஒன்றாகும். நாம் தினமும் நடப்பயிற்சி செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். நடைப்பயிற்சியில் சிலர் வேகமாக நடப்பதும் வழக்கம். விறுவிறுப்பான நடப்பயிற்சி மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள நடை பயிற்சியாகும். நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க விரும்பினால் விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஒரு நல்ல வழியாகும்.  

Brisk Walking Mistakes In Tamil

விறுவிறுப்பான நடைப்பயிற்சி உங்களுக்கு அதிக வியர்வையை உண்டாக்குகிறது மற்றும் கலோரிகளை எரிக்கும். ஆனால் சில நேரங்களில் விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் போது சில தவறுகளை செய்கிறோம். இதன் மூலம் அதன் பலனை பெற முடிவதில்லை. எனவே விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தினமும் வாக்கிங் போறதுல 'இப்படி' ஒரு நன்மையா? இதய நோய் கூட வராது தெரியுமா?

Tap to resize

Brisk Walking Mistakes In Tamil

வேகமாக நடக்கும் போது இந்த தவறுகளை தவிர்க்க வேண்டும்: 

1. சரியான காலணிகளை அணியாதது..

நீங்கள் விறுவிறுப்பாக நடக்கும் போது சரியான காலணிகளை மட்டுமே அணிந்து தான் நடக்க வேண்டும். செருப்புகள் போன்ற பிற வகையான காலணிகளை நீங்கள் அணிந்து நடந்தால் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கால் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

2. நடை வேகம்..

வேகமாக நடை பயணத்தின் போது தவறான வேகத்தில் நடப்பதை அடிக்கடி தவறு செய்கிறார்கள். உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு மெதுவான வேகத்தில் நடப்பது சரியாக இருக்காது. மிக வேகமாக நடப்பது உங்களை விரைவாக சோர்வடைய செய்து, உங்கள் நடைப்பயிற்சி நேரத்தையும், தூரத்தையும் குறைக்கும். எனவே, நிமிடத்திற்கு 100 படிகள் வேகத்தில் வேகமாக நடக்க வேண்டும்.

Brisk Walking Mistakes In Tamil

3. சரியான தோரணை இல்லாதது..

வேகமாக நடக்கும் போது சரியான தோரணை வைத்திருப்பது மிகவும் முக்கியம். சாய்ந்த தோள் அல்லது வளைந்த முதுகு போன்ற தோரணை நடந்தால் பிரச்சனைகள் ஏற்படும்.

4. சரியான ஆடை அணையாதது..

நடைப்பயிற்சி செல்லும்போது ஜீன்ஸ் போன்று இறுக்கமான மற்றும் கட்டுப்பாடான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். நடைப்பயிற்சியின் போது அதற்குரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோய்  கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி'  வாக்கிங் போனா போதும்!!

Brisk Walking Mistakes In Tamil

5. அதிக தண்ணீர் குடிப்பது தவிர்க்கவும்..

பெரும்பாலான மக்கள் நடைபயிற்சி முன் நிறைய தண்ணீர் குடிப்பார்கள். இதனால் நன்மைக்கு பதிலாக தீமை தான் ஏற்படுகிறது. ஆம் நடைப்பயிற்சிக்கு முன் அதிக தண்ணீர் குடித்தால் உங்கள் வளர்ச்சிதை மாற்றம் விரைவுப்படுத்தப்பட்டு நீர் மற்றும் உப்பு சமநிலையை சீர்குலைக்கும். எனவே தண்ணீர் குடித்த பிறகு 20-25 நிமிடங்கள் ஓய்வெடுத்து பிறகு நடைபயிற்சி செல்லுங்கள். இருப்பினும் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிப்பது அவசியம். நடைபயிற்சி முடிந்ததும் தண்ணீர் குடிக்கவும்.

6. கைகளின் நிலை..

நீங்கள் விறுவிறுப்பாக நடக்கும் போது உங்களது கைகளை நிலையாக வைத்துக் கொண்டால் எந்த பலனும் இல்லை. எனவே நீங்கள் நடக்கும்போது நடக்கும் திசையில் உங்கள் இரு கைகளிலும் வேகம் இருக்க வேண்டும். இது முழு உடலிலும் அதிர்வுகளை ஏற்படுகிறது,  உடல் உறுப்புகளை செயல்படுத்துகிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது.

Latest Videos

click me!