உங்களுக்கு ஏற்ற 'வாழ்க்கைத் துணையை' எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா? 

First Published Oct 30, 2024, 4:54 PM IST

Good Life Partner Qualities : சிறந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.  

Good Life Partner Qualities In Tamil

இன்றைய காலகட்டத்தில் காதல் மற்றும் பெரியோரால் நிச்சயித்த  திருமணங்கள் இரண்டுமே நீண்ட காலம் நீடிப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என பார்த்தால் முந்தைய காலத்தை போல தம்பதிகள் சகிப்பு தன்மையோடு இருப்பதில்லை. பெரும்பாலானோர் தங்கள் இணையரை மதிப்பது கூட இல்லை. இதை கருத்தில் கொண்டு அதன் பின்னணியில் உள்ள சில காரணங்களை இங்கு காணலாம். 

Good Life Partner Qualities In Tamil

உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டறிய சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. இந்த காலத்தில் திருமணங்கள் விவாகரத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.  கல்யாணம் என்பது ஒருவருடைய வாழ்வின் மிக  முக்கியமான முடிவாகும். இதன் மூலம் தன் வாழ்க்கைத் துணையுடன் ஒருவர் தன் வாழ்நாள் எல்லாம் கழிக்கிறார். முந்தைய திருமணங்கள் மறைமுகமானவை.

ஏனென்றால் அதில் பெண்கள் குறுகிய காலமோ நீண்ட காலமோ எவ்வளவு குடும்ப வன்முறையை அனுபவித்தாலும் அமைதி காத்தனர். அதனை வெளியில் சொல்வதில்லை. சொல்ல அவர்கள் தயங்கினர். ஆனால் இன்றைய காலத்தில் அவர்கள் பேச தொடங்கிவிட்டார்கள். அது மட்டுமின்றி எதையும் மக்கள்  தர்க்கரீதியாக சிந்திக்காமல் இருந்தனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் காதலில் விழுகிறார்கள். இதன் மூலமாக ஒருவரின்  உண்மையான இயல்பு, பழக்கவழக்கங்களை  மெதுவாகத் தெரிந்துகொள்கிறார்கள். ஆனாலும் இதில் எந்தளவு புரிதல் உண்டாகும் என்பது தனிமனிதர்களை பொறுத்தது. 

Latest Videos


Good Life Partner Qualities In Tamil

உங்களுக்கு ஏற்ற சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சில விஷயங்களை செய்யவேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை திருமணம் செய்யும் முன்பாக  நன்கு தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். இதற்கிடையில் அவர்கள் நடவடிக்கையை கவனியுங்கள். குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அவர்கள்  தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டிவிடுவார்கள். 

இதையும் படிங்க: மனைவியிடம் கணவன் கட்டாயம் சொல்ல வேண்டிய 5 பொய்கள்.. இத சொன்னா உங்க வாழ்க்கையே மாறிடும்!! 

Good Life Partner Qualities In Tamil

ஒருவரை நன்கு அறிய  பேசவும், கேட்கவும் விடவேண்டும். அப்போது தான் அவர்கள் உண்மையான அடையாளத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவார்கள். தற்போது விவாகரத்துகள் சகஜமாகிவருகின்றன. இதை தடுக்க வேண்டுமென்றால்  வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முடிவை கவனமாக எடுக்க வேண்டும்.

முதலில் அவர்களை தெரிந்துகொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது அவர்கள் இணக்கமாக இல்லை எனில் உடனடியாக அந்த உறவில் இருந்து பின்வாங்கத் தயங்கவேண்டாம். ஏனென்றால் திருமணம் பின்னாளில் வேலை செய்யாமல் போவதை விட, முதலில் வேண்டாம் என விலகுவது நல்லது.

Good Life Partner Qualities In Tamil

திருமணம் என்பது இரண்டு பேருக்குள் அன்பு செலுத்துவது மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் இணைந்திருப்பது மட்டுமின்றி வாழ்வதும் கூட. அது சரியாக இருக்க கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் நேரத்தை பகிந்து அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதனால் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் முன் கவனமாக செயல்படுங்கள்.

இதையும் படிங்க: எந்த கணவரும் தன் மனைவியிடம் ஒருபோதும் சொல்லக் கூடாத '3' விஷயங்கள்!! 

click me!