இது தெரியாம மிக்ஸி பயன்படுத்தாதீங்க... மிக்ஸியில் அரைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!

Published : Oct 31, 2024, 11:20 AM ISTUpdated : Oct 31, 2024, 11:45 AM IST

Mixer Grinder Safety Tips : மிக்ஸி அரைக்கும் போது அதில் சில பொருட்களை அரைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும். எனவே மிக்ஸியில் அரைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
15
இது தெரியாம மிக்ஸி பயன்படுத்தாதீங்க... மிக்ஸியில் அரைக்கும் முன் கவனிக்க வேண்டியவை!!
Mixer Grinder Safety Tips In Tamil

சமையலறையில் சமைக்கும் போது அவ்வப்போது மிக்ஸி பயன்படுத்துவது வழக்கம். மிக்ஸியில் போடும் எல்லாவற்றையும் அரைத்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அது தவறு. ஏனென்றால், தற்போது மிக்ஸிக்கு பதிலாக ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் ஆகியவற்றை தயாரிப்பதற்காகவே அதற்கான பிளெண்டர் பயன்படுத்தப்படுகிறது. அவை எவ்வளவு தான் வலிமையான உலோகமாக இருந்தாலும் அவற்றில் சில உணவுகளை அரைக்காமல் இருப்பது நல்லது.

25
Mixer Grinder Safety Tips In Tamil

ஆகவே, உங்களது மிக்ஸி கிரைண்டர் பழுதடைவதை தடுக்க அதில் சில பொருட்களை போட்டு அரைப்பதை தவிர்ப்பது நல்லது. எனவே இந்த பதிவில் மிக்ஸி கிரைண்டரில் என்ன மாதிரியான பொருட்களை போட்டு அரைக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Kitchen Hacks : உங்கள் மிக்ஸி நீண்ட நாள் நீடிக்க விரும்பினால் 'இந்த' ஸ்பெஷல் டிப்ஸ் உங்களுக்காக..!

35
Mixer Grinder Safety Tips In Tamil

மிக்ஸியில் போட்டு அரைக்கக்கூடாதோ பொருட்கள்:

சூடான பொருட்கள்

சில சமயங்களில் அவசரத்தில் நாம் சூடான பொருட்களை மிக்ஸி ஆனால் அது தவறு. இதன் காரணமாக சூடான பொருளிலிருந்து நீராவி வெளியேறுகிறது மற்றும் ஜாடிக்குள் அழுத்தம் உருவாகிறது. இதனால் சில சமயங்களில் வெடித்து விடும்.
இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் மற்ற பொருட்களை அரைக்கும் போது அவை மிக்ஸியில் இருந்து தானாகவே வெளியேறும். 

ஐஸ் கட்டிகள்

பல சமயங்களில் ஐஸ்கட்டி அரைக்க மிக்ஸியை பயன்படுத்துவோம். இதன் காரணமாக மிக்ஸி பிளேடு உடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல மோட்டரையும் பலவீனப்படுத்தும். வேண்டுமானால் நீங்கள் நன்கு நொறுக்கப்பட்ட ஐஸ் க்யூப்ஸைப் போட்டு அரைக்கலாம்.

45
Mixer Grinder Safety Tips In Tamil

கடினமான பொருட்கள்

மிக்ஸியில் மிகவும் கடினமான பொருட்களை போட்டு அரைத்தால் பிளேடுகளில் அழுத்தம் ஏற்பட்டு உடைய வாய்ப்பு அதிகம் உள்ளது எனவே கடினமான பொருட்களை மிக்ஸியில் அரைக்க வேண்டாம்.

குளிர்ந்த பொருட்கள்

மிகவும் குளிர்ச்சியான பொருட்களை அரைப்பதற்கு கூட மிக்ஸியை பயன்படுத்த வேண்டாம் உதாரணமாக குளிர் காப்பி பேஸ்ட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தால் அது ஜாரின் மூளையில் ஒட்டிக்கொள்ளும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் பிளேடுகளும் ஜாமாகிவிடும்.

55
Mixer Grinder Safety Tips In Tamil

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து உள்ள பொருட்களை மிக்ஸியில் ஒருபோதும் அரைக்க வேண்டாம். ஏனெனில், அதை மிக்ஸியில் அரைப்படும் போது அதிகப்படியான மாவுச்சத்தை வெளியாகும். இதனால் அவற்றில் திரவம் கலந்து, அதை மென்மையாக மாறுவதற்கு பதிலாக பசை போல் ஆகிவிடும். மேலும் அவை மிக்ஸி பிளேடுகளையும் சேதப்படுத்தும்.

இதையும் படிங்க:  ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், உங்கள் பழைய மிக்ஸியை புதிது போல் மாற்றி மீண்டும் பயன்படுத்த..சூப்பர் டிப்ஸ் .!

Read more Photos on
click me!

Recommended Stories