இந்த மாதிரி செஞ்சு மட்டும் உடல் எடையை குறைக்காதீங்க!! உடம்பு மோசமாகிடும்!

First Published | Nov 1, 2024, 10:08 AM IST

Weight Loss Mistakes : அதிகரித்து இருக்கும் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்பதற்காக தவறான மற்றும் ஆரோக்கியமற்ற சில விஷயங்களை பின்பற்றுகிறோம். ஆனால் அது தவறு. அது என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

common weight loss mistakes in tamil

கட்டுக்கோப்பான உடல் ஒருவருது தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், பல்வேறு நோய்களில் அபாயத்திலிருந்தும் அந்நபரை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் தற்போது உடல் எடை அதிகரிப்பு என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட டயட்ஸ் இருப்பது, மணி கணக்கில் ஜிம்மில் யோகா செய்வது இதுபோன்ற பல விஷயங்களை செய்கிறோம். ஆனாலும்,  உடல் பருமன் பிரச்சனையை அப்படியே இருக்கும்.

common weight loss mistakes in tamil

உணவு கட்டுப்பாடு மற்றும் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் எடை அல்லது உடல் பருமன் குறைவதில்லை. இதற்கு பின்னால் உங்களது சில வாழ்க்கை பழக்கங்கள் காரணமாக இருக்கலாம். பல சமயங்களில் ஒருவர் தெரியாமல் இது போன்ற பல தவறுகளை செய்து விடுகிறார்கள். இதனால் அவரது எடை இழப்பு பயணத்தை மெதுவாக்குகிறது.  எனவே உடல் எடையை குறைக்கும் போது எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: வேகமா தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த ஜூஸை குடிங்க!

Tap to resize

common weight loss mistakes in tamil

உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்:

சாப்பிடாமல் இருப்பது

உடல் எடையை குறைக்க முடிவு எடுக்கும் மக்கள் செய்யும் முதல் தவறு சாப்பிடாமல் இருப்பது சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது. ஆனால் உடல் எடையை குறைக்க இப்படி சாப்பிடாமல் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு தான் ஏற்படும் மற்றும் பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும். நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை மாறாக நொறுக்கு தீனி, பாக்கெட் உணவுகள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

போதிய புரதம் உட்கொள்ளல்

உணவில் புரதம் இல்லாதது தசை ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் மற்றும் எடை இழப்பு பயணத்திற்கு ஒரு தடையாக இருக்கும். இது தவிர சாப்பிடும் ஆசையும் அதிகரிக்கும். இதன் காரணமாக எடை அதிகரிக்க தொடங்குமே தவிர குறையாது.

common weight loss mistakes in tamil

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை. துரித உணவுகள் நொறுக்கு தீனிகள் இனிப்புகள் பொறித்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர, ஒருபோதும் குறையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை உங்கள் பசியை கட்டுப்படுத்துவதற்கும் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் பசியின் உணர்வுகள் தான் அதிகரிக்கும். இதன் காரணமாக அதிகமாக சாப்பிடும் ஆசை அதிகரிக்கும். இது தவிர அதிக கலோரிகளையும் சாப்பிட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் போதுமான தூக்கம் மிகவும் அவசியம்.

common weight loss mistakes in tamil

மன அழுத்தம்

எடையை குறைக்க முயற்சிக்கும் போது மன அழுத்தத்திற்கு பலர் ஆளாகிறார்கள். ஆனால் மன அழுத்தம் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதை அதிகரிக்க செய்யும் எனவே உங்களது எடை இழப்பு பயணத்தில் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருப்பது தான் நல்லது.

குறிப்பு : தைராய்டு, வைட்டமின் டி அல்லது வைட்டமின் பி12 குறைபாடு போன்ற சில உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கு எடை இழப்பு முயற்சிகளை தடுக்கலாம். உங்கள் எடை இழப்பு பணியை முடிக்க உடலில் உள்ள இந்த குறைபாட்டை சமாளிக்க வழக்கமான சோதனைகளை செய்து உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

இதையும் படிங்க:  வெயிட் லாஸ் பண்ண போறீங்களா? இந்த கட்டுக்கதைகளை இனியும் நம்பாதீங்க!

Latest Videos

click me!