
சேவிங் செய்த பிறகு சில ஆண்களின் முகத்தின் தோலானது சிவந்து காணப்படும்.. இது தவிர அதில் எரிச்சல் அல்லது சொறி ஏற்படும். இன்னும் சில ஆண்களின் தோளில் ரேசர் வெட்டுக்கள் தோன்று முகத்தில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கும். இந்த பிரச்சனைகள் உனதுடன் வாய்ந்த சருமம் அல்லது ஷேவிங் கிரீம் ஆகியவற்றால் ஏற்படலாம்.
ஷேவிங் செய்த பிறகு ஏற்படும் எரிச்சலை தணிக்க ஆண்கள் பல்வேறு வகையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது சில சமயங்களில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில் ஷேவிங் செய்த பிறகு எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஹேண்ட்ஸ்சம் பாய்ஸ் லுக் வேண்டுமா? இந்த 5 விசயங்களை மிஸ் பண்ணாதீங்க!!
ஷேவிங் செய்த பிறகு எரிச்சல் ஏற்படுவது ஏன்?
ஷேவிங் கிரீம் கற்றாலை போன்ற மென்மையான பொருட்களை கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றது. ஆனாலும் இந்த எரிச்சல் ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் சேவிங் செய்யும்போது முகத்தில் இருக்கும் முழு முடியையும் அகற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் நீங்கள் ஷேவிங் செய்யும் போது முகத்தில் இருக்கும் முழு முடியையும் நீக்கினால் கூட இந்த எரிச்சல் ஏற்படலாம்.
சில சமயங்களில் முகத்தில் இருக்கும் புடைப்புகள் வளர்ந்த முடிகள் கூட சருமத்தில் எரிச்சலூட்டும். இந்த எரிச்சலை நிறுத்த முடியாது தான். ஆனால் இதை தவிர்க்க சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவை..
ஷேவிங் செய்த பிறகு எரிச்சலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
கற்றாழை ஜெல்
ஷேவிங் செய்த பிறகு முகம் சிவப்பதையும் எரிச்சல் ஏற்படுவதையும் குறைக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதில் இருக்கும் கூறுகள் முக வீக்கம் மற்றும் எரிச்சலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே நீங்கள் ஷேவிங் செய்த பிறகு உங்கள் முகத்தில் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படியே நீங்கள் இதை 2-3 முறை முகத்தில் தடவி வந்தால் முகம் சிவத்தல் மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: ஆண்களை அழகாக வைத்திருக்கும் அட்டகாசமான வழிகள்...!
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஷேவிங் செய்த பிறகு எரிச்சல் மற்றும் சிவத்தல் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தேங்காய் எண்ணெய் முகத்தில் மெதுவாக தடவி சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவவும். இது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாற்றும். மேலும் சிவத்தல், எரிச்சல் கூட குறையும்.
மஞ்சள் தண்ணீர்
ஷேவிங் செய்த பிறகு சிவதல் மற்றும் எரிச்சலை போக்க மஞ்சள் தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும் இதற்கு மஞ்சளில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, அந்த தண்ணீரால் முகத்தை கழுவவும். மஞ்சளில் இருக்கும் பண்புகள் தோல் எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.