வீட்டில் 'எலிகள்' அட்டகாசமா? 1 ஸ்பூன் வத்தல் பொடியில் ஓட ஓட விரட்டலாம்!!

First Published | Nov 2, 2024, 2:03 PM IST

Home Remedies To Get Rid Of Rats : வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தால் மருந்துகள் ஏதும் பயன்படுத்தாமல், மிக எளிதாக விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Home Remedies To Get Rid Of Rats In Tamil

உங்களது கனவு வீட்டில் எலிகள் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? எலி தொல்லை இல்லாத வீடுகள் எதுவுமே இல்லை. எலிகள் வீட்டில் கிருமிகள் மற்றும் அழுக்கை பரப்புவது மட்டுமின்றி, உங்களது முக்கியமான பொருட்கள், சோபாக்கள், ஆடைகள், காலணிகள் என அனைத்தையும் அவை கடித்து அழித்துவிடும். எலிகளைப் பிடிக்க பலர் எலிபொறிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது.

Home Remedies To Get Rid Of Rats In Tamil

உங்களது வீட்டிலும் நீங்கள் இது போன்ற பிரச்சனையை சந்தித்தால் உங்கள் வீட்டில் இருந்து எலிகளை விரட்ட சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால் மட்டும் போதும். எலிகள் உங்கள் வீட்டில் இருந்து நிரந்தரமாக ஒழிந்து விடும்.

இதையும் படிங்க: அரிசிக்குள் வண்டுகள், பூச்சிகள் வருவதை தடுக்க 4 'நச்' டிப்ஸ்!! 

Tap to resize

Home Remedies To Get Rid Of Rats In Tamil

வீட்டிலிருந்து எலிகளை விரட்ட சில வழிகள் இங்கே:

1. மிளகு எண்ணெய்

உங்களது படுக்கையறை அல்லது சமையலறைக்குள் எலிகள் நுழைந்துவிட்டால், அவற்றை விரட்ட மிளகு எண்ணெய் பயன்படுத்தலாம். ஏனெனில் எலிகளுக்கு மிளகின் வலுவான வாசனை பிடிக்கவே பிடிக்காது. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் 10 சொட்டு மிளகு எண்ணெய் சேர்த்து, எலிகள் இருக்கும் இடங்களில் நன்கு தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வாசனையால் எலிகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும்.

2. படிகாரம்

எலிகளுக்கு படிகாரத்தில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே படிகாரத்தை நன்றாக அரைத்து பொடியாக்கி அதை எலிகள் வாழும் இடங்களில் தூவி விடுங்கள். எலிகள் படிகார பொடியை நுகர்ந்தவுடன் அவை தானாகவே உங்களது வீட்டை விட்டு ஓடிவிடும். ஒருவேளை உங்களிடம் படிகாரம் இல்லை என்றால் கற்பூரத்தை கூட இப்படி பயன்படுத்தலாம். ஏனெனில் கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை எலிகளுக்கு பிடிக்காது.

Home Remedies To Get Rid Of Rats In Tamil

3. சிவப்பு மிளகாய் பொடி

இது எல்லார் வீட்டு சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்கும். சிவப்பு மிளகாய் பொடியை எலிகள் வாழும் இடத்தில் தூவினால் எலிகள் அவற்றை மணந்து, அதிலிருந்து வரும் கடுமையான வாசனையால் எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.

4. பூண்டு

பூண்டு எல்லா வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். பூண்டை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் எலிகளை விரட்டலாம். ஏனெனில் எலிகளுக்கு பூண்டின் வாசனை பிடிக்காது. இதற்கு பூண்டை நன்றாக நசுக்கி அதை தண்ணீரில் கலந்து அந்த நீரை எலிகள் வாழும் இடங்களில் தெளிக்க வேண்டும். எலிகள் அதன் வாசனையால் உங்கள் வீட்டில் இருந்து ஓடிவிடும்.

இதையும் படிங்க:  பல்லி, கரப்பான் தொல்லையா? பத்து ரூபா செலவு செஞ்சா போதும் விரட்டி அடிக்கலாம்!!

Home Remedies To Get Rid Of Rats In Tamil

5. வெங்காயம்

வெங்காயம் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும். வீட்டிலிருந்து எலிகளை விரட்ட வெங்காயம் ஒரு சிறந்த ஆயுதம் ஆகும். உண்மையில் வெங்காயத்தில் இருந்து வரும் வாசனை எலிகளை எரிச்சல் அடைய செய்கின்றன. எனவே வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி எலிகள் தங்குமிடத்தில் வைத்தால், அதிலிருந்து வரும் வாசனையால் எலிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறும்.

6. கிராம்பு எண்ணெய் 

கிராம்பு எண்ணெயை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் எலியை சுலபமாக விரட்டலாம். இதற்கு ஒரு துணியில் கிராம்பு எண்ணெயை தெளிக்கவும். பிறகு அதை எலிகள் மறைவிடங்களில் வைக்கவும். அதன் வாசனையால் எலிகள் உடனடியாக உங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

Latest Videos

click me!