ஆண்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாமா?
Hair Care Tips For Men : பெரும்பாலான ஆண்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க விரும்புகிறார்கள். அப்படி குளிப்பது உண்மையில் நல்லதா இல்லையா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
முடி பராமரிப்பு விஷயத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர் அல்ல என்பதுதான் உண்மை. ஆனால், பெண்களைப் போல் அல்லாமல் ஆண்களின் தலை முடி மிகவும் சிறியதாக இருப்பதால், பெரும்பாலான ஆண்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க விரும்புகிறார்கள்.
ஆனால், இப்படி தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பது நன்மைக்கு பதிலாக தீமை தான் விளைவிக்கும். காரணம், பெரும்பாலான ஷாம்புக்களில் சல்பேடுகள், பிற ரசாயனங்கள் இருப்பதால் தான்.
தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தால், தலைமுடி விரைவில் நரைக்கத் தொடங்கும் மற்றும் முடி உதிர்வு ஏற்படும். அப்படியானால், வாரத்திற்கு எத்தனை முறை தலைமுடிக்கு ஷாம்பு போட்டு வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆண்களே நீங்கள் தினமும் ஷாம்பு போட்டு குளித்தால், அவை முடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை அகற்றி விடும். எனவே, வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்துங்கள்.
ஷாம்பு உச்சம் தலையில் இருக்கும் அழகு கிருமிகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்களை அகற்ற உதவும். அதே சமயம், அதை அதிகமாக பயன்படுத்தினால் முடியின் இயற்கையான எண்ணெய்களை குறைத்து, தலை முடியை வறட்சியாகவும், முடியக்கூடியதாகவும் மாற்றிவிடும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்தால் அல்லது உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால் வேண்டுமானால் கூடுதலாக ஒருநாளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஆண்களை அழகாக வைத்திருக்கும் அட்டகாசமான வழிகள்...!
முக்கியமாக என்ன பசை முடி உள்ளவர்கள் அடிக்கடி ஷாம்பு போடலாம். ஆனால், நீங்கள் உங்கள் முடியின் வகைக்கு ஏற்ற ஷாம்பை பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: ஹேண்ட்ஸ்சம் பாய்ஸ் லுக் வேண்டுமா? இந்த 5 விசயங்களை மிஸ் பண்ணாதீங்க!!
அதுபோல வறண்ட முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு போடுவதை தவிர்க்க வேண்டும் இல்லை எனில் உங்கள் தலைமுடி நரைக்க தொடங்கும் மற்றும் விரைவில் முடி உதிர்ந்து விடும்