ஜப்பானுக்குக் கூட்டிச் செல்லும் ரயில்வே! IRCTC வழங்கும் 8 நாள் சுற்றுலா பேக்கேஜ்!

Published : Nov 03, 2024, 10:17 AM ISTUpdated : Nov 03, 2024, 10:41 AM IST

ஐஆர்சிடிசி வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் மூலம் குறைந்த செலவில் ஜப்பான் சுற்றுலா சென்று வரலாம். உலகின் நான்காவது பெரிய தீவு நாடான ஜப்பானைச் சுற்றுப் பார்க்க சிறந்த வாய்ப்பாக உள்ளது.

PREV
16
ஜப்பானுக்குக் கூட்டிச் செல்லும் ரயில்வே! IRCTC வழங்கும் 8 நாள் சுற்றுலா பேக்கேஜ்!
IRCTC Japan Tour Package 2025

ஐஆர்சிடிசி வழங்கும் சுற்றுலா பேக்கேஜ் மூலம் குறைந்த செலவில் ஜப்பான் சுற்றுலா சென்று வரலாம். உலகின் நான்காவது பெரிய தீவு நாடான ஜப்பானைச் சுற்றுப் பார்க்க சிறந்த வாய்ப்பாக உள்ளது.

26
Japan Tour Package

பண்டைய மரபுகள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற நாடு ஜப்பான். பிரமிக்க வைக்கும் செர்ரி மலர்கள், பாரம்பரிய தேநீர் விழாக்கள், சாமுராய் கலாச்சாரம், புல்லட் ரயில்கள், ரோபாட்டிக் தொழில்நுட்பம் ஆகியவை உலகமே ஜப்பானைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் சிறப்பு அம்சங்கள்.

36
Japan tourism

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் வழங்கும் சர்வதேச டூர் பேக்கேஜில், ஜப்பானுக்குச் செல்வதற்கு சூப்பரான சான்ஸ் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் பயணம் செய்பவர்களுக்கு தரமான உணவு மற்றும் 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குமிட வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.

46
IRCTC Japan Tour 2025

THE SPECTACULAR CHERRY BLOSSOM JAPAN EX DELHI (NDO29) என்று அழைக்கப்படும் ஐஆர்சிடிசி ஜப்பான் சுற்றுலா பேக்கேஜ் மூலம் 8 இரவுகள் மற்றும் 9 பகல்கள் ஜப்பானில் பயணம் செய்து பல இடங்களைப் பார்த்து ரசிக்க முடியும். இதற்கான கட்டணமாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும்.

56
Japan Tourism 2025

இந்த சுற்றுலாத் தொகுப்பில், நரிடா (டோக்கியோ), ஹகோன், மவுண்ட் புஜி, கியோட்டோ, ஹிரோஷிமா, கோபி, ஒசாகா போன்ற பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.

66
Japan Tourist

இந்த ஜப்பான் பயணத்திற்கான விமானம் 2025ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்படும். மார்ச் 28ஆம் தேதி மீண்டும் விமானம் மூலம் டெல்லி திரும்பிவிடலாம். இந்த சுற்றுலா பேக்கேஜ் குறித்து விரிவான தகவல்களை அறிந்துகொள்ள ஐஆர்சிடிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NDO29

Read more Photos on
click me!

Recommended Stories