Roof Cooling Tips: கோடை வெயிலில் உங்கள் வீடு அனல் கக்குகிறதா? ஏசி பில் எகிறுகிறதா? கவலையை விடுங்கள். உங்கள் வீட்டை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு சூப்பர் ஐடியா குறித்து பார்க்கலாம்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, விலை உயர்ந்த ஏசி அல்லது கூலிங் சாதனங்கள் மட்டும் தீர்வல்ல. மொட்டை மாடியில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை நிற ரிஃப்ளெக்டிவ் பெயிண்ட் அடிப்பது ஒரு புத்திசாலித்தனமான, குறைந்த செலவு உபாயம். இந்த டெக்னிக் வேலை செய்யும் என ஆய்வுகளும் கூறுகின்றன.
25
ஹீட் ரிஃப்ளெக்டராக செயல்படும்
கோடையில் மொட்டை மாடி நெருப்பாகக் கொதிக்கும். ஆனால், அதன் மீது நீர்த்த சுண்ணாம்பை (Slaked Lime) பூசினால், அதை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். சுண்ணாம்பை தண்ணீரில் கலந்து, கெட்டியான வெள்ளை திரவமாக மாற்றி, மொட்டை மாடியில் பூச வேண்டும். இந்த வெள்ளை திரவம் ஒரு 'ஹீட் ரிஃப்ளெக்டராக' செயல்பட்டு, சூரியக் கதிர்களை உள்ளிழுக்காமல் திருப்பி அனுப்புகிறது.
35
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
மொட்டை மாடிக்கு வெள்ளை அடிக்கும் முறைக்கு பின்னால் அறிவியல் காரணமும் உள்ளது. 'ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் வெளியான ஒரு அறிக்கையின்படி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் (University College London) விஞ்ஞானிகள் 2018-ஆம் ஆண்டின் உச்சகட்ட வெயில் நாட்களில் இந்த முறையைச் சோதித்தனர். மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிப்பது சுற்றுப்புற வெப்பநிலையை 1.3 முதல் 2 டிகிரி வரை குறைக்க முடியும் என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
இதுமட்டுமின்றி, நகரங்களில் அதிகரித்து வரும் வெப்பத்தை (Urban Heat Island Effect) குறைக்க இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளை நிறம் சூரியக் கதிர்வீச்சை மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்புவதால், மொட்டை மாடியின் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது.
55
குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை
மொட்டை மாடிக்கு சுண்ணாம்பு அல்லது வெள்ளை பெயிண்ட் அடிக்கும் இந்த முறை மலிவானது மட்டுமல்ல, முழுமையாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் கூட. ஏசிகள் வெளிக்காற்றை மேலும் சூடாக்கும்போது, இயற்கையாகவே வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த டெக்னிக்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.