மே 1ம் தேதி முதல் மதுபானங்கள் விலை உயர்கிறது.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் குடிமகன்கள்!

Published : Apr 26, 2026, 12:46 PM IST

ஆல்கஹால் அளவை பொறுத்து புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது. மே 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தால், மதுபானங்களின் விலை 20% வரை உயர்கிறது. இது தற்போதைய ஆட்சியில் 5வது முறையாக விலை உயர்த்தப்படுவதால் குடிமகன்கள் அதிர்ச்சி.

PREV
15

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கும் கிரஹலட்சுமி திட்டம், மொத்தம் 1.10 கோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த பணம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதுதவிர பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டமான சக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் கர்நாடகா அரசு நிதி நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து மதுபானங்கள் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

25

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது முதல்வர் சித்தராமையா ஆல்கஹாலின் அளவுக்கு ஏற்றார்போல் வரி விதிக்கும் முறையை நடைமுறை அறிவித்தார். அதாவது நாட்டிலேயே முதல் முறையாக ஆல்கஹாலின் அளவை பொறுத்து மதுபானங்கள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

35

இதனையடுத்து கலால் வரியில் திருத்தம் செய்ய சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 18ம் தேதி மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கலால் வரியில் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு வரி திருத்தம் மே 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மே 1ம் தேதி மதுபானங்கள் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்கிறது. அதாவது குறைந்த விலைக்கு விற்பனையாகும் மதுபானங்கங்களில் தான் அதிகளவு ஆல்கஹால் இடம் பெற்றிருக்கும். ஆகையால் குறைந்த விலைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் விலையே அதிகமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

45

எந்த பிராண்ட் விலை எவ்வளவு உயரும்?

சந்தையில் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகளின் விலையில் சுமார் 10 முதல் 25 ரூபாய் வரை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரிஜினல் சாய்ஸ் (Original Choice) 180 ml பாட்டில் தற்போது 95 ரூபாயாக உள்ளது, புதிய விலை சுமார் 115 ரூபாயாக இருக்கும். அதேபோல, ஓடி (OT - Old Tavern) 180 ml பாட்டிலின் தற்போதைய விலை 80 ரூபாய், புதிய விலை 100 ரூபாயாக மாறும். ஏழை மக்களிடையே பிரபலமான ராஜா விஸ்கியின் (Raja Whisky) 180 ml பாட்டிலின் புதிய விலை 95 ரூபாயாக இருக்கும். இதன் தற்போதைய விலை 70 ரூபாய்தான். ஹேவார்ட்ஸ் (Haywards) தற்போது 100 ரூபாயாக உள்ளது, புதிய விலை 120 ரூபாயாக உயரும்.

55

கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. அப்போது இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.45 வரை உயர்ந்தது. இந்நிலையில் தற்போதும் மதுபானத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 2023 ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் இதுவரை நான்கு முறை மதுபானங்கள் விலையை உயர்த்திய நிலையில் தற்போது 5வது முறையாக உயர்த்தியுள்ளது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories