Published : Sep 28, 2022, 11:55 AM ISTUpdated : Sep 28, 2022, 12:25 PM IST
Trisha beauty secrets: Trisha Krishnan – Fitness and Diet Secrets:40 வயதை நெருங்கும் திரிஷா கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். இதற்காக அவர் பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரையுலகில் அறிமுகமான ஜோடி திரைப்படம் முதல், தற்போது வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை, ஒரே மாதிரி ஃபிட்டாகவே இருக்கின்றார். இதற்காக அவர் என்ன தான் செய்கிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். த்ரிஷாவின் இந்த பிட்னஸ் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பிட்னஸ் ரகசியம் பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
1. காலையில் வெறும் ஊட்ட சத்து மிக்க பழங்கள் மட்டுமே, பொரித்த, வறுத்த உணவுகளுக்கு இடம் கிடையாதாம்.
2. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
3. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவர். அதில் ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிட்டவை இவருக்கு பிடித்தமானவையாகும்.
36
Trisha
4. தினசரி யோக, உடற்பயிற்சி, தியானம் மேற்கொள்வது.
5. ஃபிரெஸ் ஜூஸ் மட்டுமே குடிப்பார். அதேபோல வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழரச பானங்கள் விரும்பி குடிப்பவராம்.
6. சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கு இடமே கிடையாதாம்.
46
Trisha
7. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம்.
8. அவர் கையில் எப்போதும் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்று இருக்கும்.
இருப்பினும், அவர் பிரியாணி விரும்பி சாப்பிடுவாராம். ஒரு வேளை உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார். தேவைபட்டால் ஒரு நாள் முழுவதும் பட்டினி கூட இருப்பாராம்.
தற்போது, 40 வயதை நெருங்கும் திரிஷா, மணிரத்தினம் இயக்கத்தில் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதிலும் திரைக்கு வரவிருக்கும் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
66
Trisha
இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதில், 20 வருடங்களுக்கு முன்பு பார்த்தது போல் அதே பிட்னஸ் உடன் பளபளப்புடன் கூடிய சருமத்துடன் இருக்கும் திரிஷாவின் புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.