Drumstick leaf tea: முருங்கை கீரை டீ குடிப்பதால், இவ்வளவு நன்மைகள் இருக்கா..? கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்..!

First Published | Sep 28, 2022, 10:55 AM IST

Drumstick leaf tea: சர்க்கரை நோய், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கை கீரை டீ பருகினால், மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.

spices drink

நீங்கள் உடல் நல பிரச்சனையால் மருத்துவமனை சென்றால், மருத்துவர்கள் முதலில் சொல்வது காபி, டீ குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவது. ஏனெனில், நீங்கள் குடிக்கும் காபி, டீ போன்றவை பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன.  எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த முருங்கை கீரை டீ பருகினால், மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட்ட உதவும்.

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

முருங்கை கீரை நன்மைகள்:

தினமும் ஒரு கப் முருங்கை கீரை டீ குடிப்பதால், உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இதில் இருக்கும் 3 மடங்கு இரும்பு சத்து உடலில் வலு சேர்ப்பதோடு, உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றலை தருகிறது.

சர்க்கரை நோய், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கை கீரை டீ பருகினால், மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.

Tap to resize

முருங்கை டீ வீட்டிலேயே தயார் செய்திருக்கிறீர்களா?

 தேவையான பொருள்கள்:

முருங்கைக்கீரை பொடி – ஒரு டீஸ்புன் 

கிரீன் டீ - ஒரு டீஸ்புன் 

இஞ்சி – உள்ளங்கை அளவு

புதினா இலைகள் -2 

எலுமிச்சை சாறு -1  டீஸ்புன் 

தேவையான அளவு - சூடான நீர் 

 ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன் 

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

செய்முறை விளக்கம்:

அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ப்ளர் தண்ணீரைக் நன்கு கொதிக்க வைத்த, பின் முருங்கை இலை தூள் 1/2 டீஸ்பூன் அளவு சேர்க்கவும்.

பிறகு அதனுடன், கிரீன் டீ, இஞ்சி, புதினா, ஏலக்காய், எலுமிச்சை சாறு சேர்ந்து கொதிக்க விட வேண்டும். 

பிறகு அடுப்பை அணைத்து விட்டு, வடிகட்டி இனிப்புக்கு பனங்கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம். இந்த டீயை தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம். நிச்சயம் இதனைக் காலை நேரங்களில் மட்டுமே குடிக்கவேண்டும்.

இதனை உணவாகவும் உட்கொள்ளலாம், ஆம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சூடான சாப்பாட்டில், ஒரு டீஸ்பூன் அளவு பொடி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு நெய் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொடுக்கலாம்.

முருங்கைக் காய்கள், இலை, பூ மட்டுமன்றி, பட்டைகள், வேர்கள், விதை, முருங்கை பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க...Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

Latest Videos

click me!