பிரதான கதவுக்கு மேல் கழிப்பறை இருக்கக்கூடாது
வீட்டின் பிரதான கதவு அல்லது நுழைவாயில் கதவுக்கு மேலே எந்த கழிப்பறையும் இருக்கக்கூடாது. ஏனெனில், வீட்டின் நுழைவாயில் கதவு, மனித வாய் போன்றது. சுற்றுப்புறத்திலிருந்து வரும் பாஸிட்டிவ் சக்தி பிரதான கதவு வழியாக வீட்டிற்குள் நுழைகிறது. வீட்டில் செல்வத்தை அள்ளி தரும், மகாலட்சுமி இந்த கதவின் வழியாக வீட்டில் நுழைகிறார். அதேபோன்று, நீங்கள் வீட்டில் எந்த பூஜை செய்தாலும், கதவை திறந்து வைத்து செய்ய வேண்டும். அப்போது தான் தெய்வத்தின் அருள் கிடைக்கும். ஆனால், பல அடுக்கு மாடி குடியிருப்புகளில், இந்த வாஸ்து குறைபாட்டை பெரும்பாலானோர் கவனிக்க மறந்துவிடுவதுண்டு.எனவே, இனிமேல் நீங்கள் இந்த குறைபாட்டை சரி பார்த்து கொள்ளுங்கள்.