மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை எங்கும் பதியப்பட்டுள்ள ஓவிய வழிபாடுகளும் சிற்ப வேலைகளும் தூண் வேலைகளும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஆச்சரியப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர். உலகப் புகழ்வாய்ந்த இந்த ஊரில் பிரகதீஸ்வரர் கோயில் மிகப் புகழ்பெற்றதாகும். கிபி 1400 இல் சோழர்கள் காலத்தில் தோன்றியது இந்த ஊரின் புகழ்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குகை ஓவியத்திற்கு உலகப் புகழ் உள்ளது. சித்தன்னவாசல் இந்த ஊர் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் ஓவிய உலகப் புகழ் பெற்றது.
திருச்சிராப்பள்ளி உள்ள மலைக்கோட்டை இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள் கொண்டுள்ளது. காவிரி கரை ஓரம் அமைந்துள்ள இக்கோட்டை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.