உங்கள் வீட்டின் நிலை வாசல் படியில் இந்த முடிச்சை கட்டி தொங்க விடுங்கள்..லட்சுமி தேவி அருளால் பணம் வந்து சேரும்

Published : Sep 27, 2022, 07:01 AM IST

Panam sera tips Tamil: Vastu  tips: ஒரு வீட்டின் நிலை வாசல் படியில் இந்த முடிச்சை கட்டி தொங்க விடுங்கள். லட்சுமி தேவி அருளால் பணம் நிலை வாசல் வழியே, வந்து சேரும். லட்சுமி தேவி எப்போதும் வீட்டில் தங்கி விடுவார்.

PREV
16
உங்கள் வீட்டின் நிலை வாசல் படியில் இந்த முடிச்சை கட்டி தொங்க விடுங்கள்..லட்சுமி தேவி அருளால் பணம் வந்து சேரும்
Vastu tips

நம்மில் பலர், வீட்டில் கடன் பிரச்சனை, வந்த வழி தெரியாமல் பணம் வெளியே செல்கிறது. வீட்டில் எப்போதும் பீடை பிடித்து ஆட்டுகிறது என்று எத்தனை பேர் கஷ்டப்படுகின்றோம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். இதற்கு முக்கியமாக வீட்டில் மகாலட்சுமி தேவி அருள் நிறைவாக கிடைக்க உங்கள் வீட்டில் நிலை வாசல் படியில் கட்டாயம் இதை கட்டி தொங்கி விடுங்கள்.

 

26
Vastu tips

அப்புறம் பாருங்கள், வீட்டில் செல்வம் பெருகும், திடீர் பண வரவு உண்டாகும். கொடுத்த கடன் கைக்கு வரும். யாரிடமும் இனி கடன் வாங்க மாட்டீர்கள். இதோடு உங்களுடைய நிலை வாசலுக்குள் எந்த நேரமும் பணம் வந்த வண்ணம் இருக்கும்.  ஆம், உங்களின் ஒட்டுமொத்த பண பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க கூடிய பரிகாரம் தான் இது.அது என்ன பரிகாரம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

மேலும் படிக்க..Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?

36
Vastu tips

இந்த பரிகாரத்திற்கு சக்தி வாய்ந்த இரண்டு பொருட்களை பயன்படுத்த போகின்றோம். முதல் பொருள் வசம்பு. இரண்டாவது பொருள் படிகாரம். இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேரும்போது அதற்கு அதீத சக்தி வந்துவிடும். கண் திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஒழித்து கட்டுவதற்கு இந்த பரிகாரம் செய்யக்கூடிய வேலை ரொம்ப பெரியது.

மேலும் படிக்க..Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?

46
Vastu tips

இந்த இரண்டு பொருட்களையும் வைத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விட வேண்டும். பிறகு, நிலை வாசலுக்கு வெளியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை அந்த அகல் விளக்கு பக்கத்தில் ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து விட்டு, குலதெய்வத்தையும் நன்றாக வேண்டிக் கொள்ள வேண்டும்.

56
Vastu tips

காலை சூரிய பகவான் உதிக்கும் 5 லிருந்து, 6:10 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவ்வளவு தான். உங்களை பிடித்த பண பிரச்சனை அனைத்தும் தீர்ந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் மன நிம்மதி நிறைவாக இருக்கும்.  

 

66
Vastu tips

இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. வருடம் ஒருமுறை உள்ளே இருக்கும் பொருட்களை முடிச்சுடன் அப்படியே ஓடும் தண்ணீரில் விட்டு விடலாம். இந்த பரிகாரத்தினால் உங்களுக்கு  மன திருப்தி இருந்தால் மீண்டும் இதே போல ஒரு முடிச்சை கட்டி நிலை வாசலில் தொங்கவிடலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க..Health Tips: டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்..மீறினால், ஆரோக்கியத்திற்கு என்ன பிரச்சனை..?

click me!

Recommended Stories