
Six Signs You Are Doing Good At Parenting : குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு. எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், எல்லா சூழ்நிலைகளிலும் குழந்தைகள் உங்களிடம் வர முடிந்தால் அது நிச்சயமாக நல்ல உறவாக இருக்கும். ஆனால் அதற்கும் சில எல்லைகள் உண்டு. இந்தப் பதிவில் சிறந்த பெற்றோர் செய்யும் 6 விஷயங்கள் குறித்து காணலாம்.
குழந்தைகள் எந்த பயமுமின்றி பெற்றோரிடம் மனம் திறந்து பேச முடிந்தால் அது நிச்சயம் நல்ல அறிகுறி. பெற்றோர் கேள்விகள் கேட்கும்போது அல்லது பேச ஆரம்பிக்கும்போது குழந்தைகள் தங்களுடைய மனம் திறந்து உண்மையை பேசினால் பெற்றோராக நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள். பொதுவாக குழந்தைகள் தங்களுடைய கனவுகள், பயங்கள், நம்பிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினால் உணர்வுரீதியாக பெற்றோரிடம் பாதுகாப்பாக உணர்வதாக அர்த்தம். இது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள், துயரங்கள் இருந்தாலும் அதன் நடுவில் கொஞ்சம் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான நாளிலும் கூட அதை புன்னகையுடன் கையாள தெரிந்த பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்பாக உணர செய்வார்கள். இது ஆரோக்கியமான விஷயம். முழுக்க சோகமாக இருக்காமல் மகிழ்ச்சியும் தேவை.
குழந்தைகள் தங்களுடைய தவறுகளை குறித்து வெட்கப்படாமல், பயப்படாமல் பேசக்கூடிய சூழலை பெற்றோர் உருவாக்கி தர வேண்டும். பெற்றோர் தங்களுடைய தவறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். குழந்தை பெற்றோரிடம் வந்து தான் செய்த தவறை ஒப்புக்கொண்டால் அது அவர்களுடைய உணர்ச்சி நுண்ணறிவை காட்டுகிறது. இது குழந்தைகளை நீங்கள் பாதுகாப்பாக உணர செய்ததன் வெளிப்பாடு. அவர்களுடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படும் என்பதை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள். வெறும் கீழ்படிதலை மட்டுமின்றி பொறுப்பையும் குழந்தைகளுக்கு கற்பிப்பது அவசியம்.
இதையும் படிங்க: பெற்றோரே! உங்க குழந்தைக்கு மன அழுத்தம் இருக்கா? இந்த விஷயத்தை கவனிங்க!!
மன்னிப்பு என்பது இருதரப்பிலிருந்து வரக்கூடியது. குழந்தைகள் மன்னிப்பு கேட்பது போல பெற்றோரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர் வலிமையானவர்களாக, சரியானவர்களாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் மன்னிப்பு கேட்க தயங்காத மனிதர்களாகவும் இருப்பது அவசியம். இது குழந்தைகளிடம் மரியாதை என்பது ஒருதலைபட்சமானது என்ற எண்ணத்தை விளக்கி புரிதலை ஏற்படுத்தும். குழந்தைகளும் கனிவுடன் கருணையுடனும் நடந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: குழந்தைங்க தூங்க அடம் பிடிக்குறாங்களா? இந்த '1' விஷயம் பண்ணா சீக்கிரமே தூங்கிடுவாங்க!!
- மதிப்பெண்கள், தோற்றம், திறமை உள்ளிட்ட எந்த விஷயத்திலும் உங்களுடைய குழந்தையை பிற குழந்தைகளோடு ஒப்பிடாத பெற்றோராக இருந்தால் நிச்சயம் சரியான பாதையை தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். குழந்தைகளின் வளர்ச்சி தனித்துவமானது. அவர்கள் சிறந்தவர்களாக வளர மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது.
- நீங்கள் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக மட்டும் நடந்து கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. ஒரு சிறு தவறுக்குப் பிறகு பெற்றோரின் கடமையாக நீங்கள் கண்டிப்பாக நடந்து கொண்டிருப்பீர்கள். அதன் பின்னர் குழந்தை உங்களிடம் வந்து அருகே அமர்ந்தால் பேச முயற்சி செய்தால் அதை தடுக்காமல் அவர்களிடம் உரையாடுங்கள். இது குழந்தையின் சுய மதிப்பை வளர்க்கக்கூடிய வழிமுறையாகும்.