Study Details on Children's Anxiety and Depression
குழந்தைகள் பார்ப்பதற்கு எந்த கவலையும் இல்லாதது போல தெரிந்தாலும், அவர்களுக்கும் மனதளவில் சில பாரங்கள் இருக்கக் கூடும். சிறுவயதில் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்புகளான மன அழுத்தம், கவலை இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜமா பிடியாடிரிக்ஸ் (JAMA Pediatrics) இதழில் வெளியான ஆய்வு தகவல்களை இங்கு காணலாம்.
26
child anxiety and depression increasing
சிகாகோவின் ஆன் & ராபர்ட் எச். லூரி குழந்தைகள் மருத்துவமனைதை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுப்பாய்வு செய்தனர். அதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பதட்டம், மனச்சோர்வு உள்ளவர்கள் எண்ணிக்கை 2016 முதல் 2022 ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது தெரியவந்தது.
குழந்தைகளிடம் மனரீதியான பிரச்சனைகள் தான் அந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. தலைவலி, இதய பிரச்சனைகள் போன்ற ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆய்வுகளின்படி, பதற்றத்தால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் விகிதம் 2016ஆம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே 2022ஆம் ஆண்டில் 10.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மனச்சோர்வு விகிதம் 3.2%-இல் இருந்து 4.6%-ஆக அதிகரித்துள்ளது.
மனச்சோர்வு தவிர மற்ற உடல் நல பிரச்சினைகள் குறைந்துள்ளன. ஆஸ்துமா 8.4% ஆக இருந்தது 6.5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மோசமான தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி பாதிப்பு 3.5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்துள்ளது. இதய நோய்கள் இருந்த குழந்தைகளின் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
56
Children health and depression
வளரும் குழந்தைகள், இளைஞர்களிடம் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு முடிவுகள் நமக்கு சொல்வதாக நிபுணர்கள் அடிக்கோடிட்டுக் கட்டுகின்றனர். பதட்டம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள பெற்றோர் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான ஆதரவை வழங்க வேண்டும்.
66
Children Isolated Depression
உங்களுடைய குழந்தை எதன் மீதும் ஆர்வம் கொள்ளாமல் மனச்சோர்வுடன் காணப்பட்டால் அவர்களுடன் உரையாடுவது உங்களுடைய கடமையாகும். எந்த உற்சாகமும் இன்றி தனிமையாக, சோர்வாக அவர்கள் காணப்பட்டால் அதற்கு கவனம் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.