
How to Prevent Idli and Dosa Batter from Turning Sour : பொதுவாக பெரும்பாலானோர் வீட்டில் இட்லி, தோசை மாவு எப்போதுமே ஸ்டாக் ஆக வைத்திருப்பார்கள். ஆனால் கோடை காலம் வந்தாலும் இட்லி தோசை மாவை சேமிப்பது என்பது சவாலானதாக இருக்கும். அதுவும் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையென்றால் ஒரு நாளைக்கு மேல் மாவில் இட்லி அவித்தால் கூட வாயில் வைக்க முடியாத அளவிற்கு புளித்திருக்கும்.
பொதுவாகவே இட்லி, தோசை மாவானது அரைத்த மூணு நாள் வரை மட்டுமே புளிக்காமல் பிரெஷ்ஷாகவே இருக்கும். ஆனால் சிலர் அது வீடுகளில் இட்லி தோசை மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே இருக்கும். அது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அதற்கென ஒரு சில பக்குவங்கள் இருக்கிறது. அந்த பக்குவத்தில் நீங்கள் மாவை அரைத்தால் ஒரு வாரம் ஆனாலும் மாவு கெட்டுப் போகாமல் இருக்கும். சரி இப்போது இட்லி தோசை, மாவு புளிக்காமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மாவு புளிக்காமல் நீண்ட நாள் இருக்க டிப்ஸ்:
- முதலில் அரிசியை தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைக்காமல் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊற வைத்தால் போதும். அரிசி அதிகமாக ஊறினால் மாவு சீக்கிரமாக புளிக்க வாய்ப்பு உள்ளது.
- உளுந்தம் பருப்பு சீக்கிரமாகவே ஊறிவிடும் என்பதால் அதை ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீரில் ஊற வைத்தால் போதும்.
- அதுபோல மாவை அரைக்கும் முன் கிரைண்டரை நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில் நீங்கள் கடைசியாக அரைத்த மாவின் புளிப்புத்தன்மை அந்த கல்லில் இருக்கும்.
- மேலும் மாவை அரைக்கும் போது நீண்ட நேரம் அரைப்பதை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலானவர் மாவரைக்கும் போது கிச்சனில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்படி நீங்கள் நீண்ட நேரம் மாவு ஆட்டினால் கிரைண்டர் சூடாகும். பிற்கு அந்த சூட்டிலேயே மாவு சீக்கிரமே புளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாவை நீண்ட நேரம் அரைக்காமல் கவனமாக இருங்கள்.
- உளுந்தை அரைக்கும் போது அடிக்கடி தண்ணீர் தெளித்து அரைக்கும் போது 20-25 நிமிடத்திலேயே உளுந்து பொங்கி வந்துவிடும். அதுபோல அரிசியை அரைக்கும் போதும் சரியான நேரத்தில் கணக்கிட்டு அரைத்து எடுக்கவும்.
- சிலர் அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து அரைப்பார்கள். ஆனால் நீங்கள் மாவு நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க விரும்பினால் உளுந்து மற்றும் அரிசியை தனித்தனியாக அரைக்கவும். ஒன்றாக ஒருபோதும் அரைக்க வேண்டாம்.
- முக்கியமாக மாவு அரைக்கும் போது கைகளை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் அல்லது மரக் கரண்டியை பயன்படுத்துங்கள். கைகளை பயன்படுத்தினால் உடல் சூட்டினால் மாவு சீக்கிரமாகவே புளிக்க ஆரம்பித்துவிடும்.
- மாவை அரைத்த பிறகு உப்பு போட்டு கலக்கி வைக்க கூடாது. உப்பு போடாமல் அப்படியே மூடி வைத்து விடுங்கள். மாவு அரைத்து பிறகு சுமார் 3 மணி நேரம் மட்டும் வெளியே வைத்தால் போதும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
- தேவைப்படும் போது மட்டுமே மாவை எடுத்து பயன்படுத்துங்கள். ஆனால் கைகளை பயன்படுத்தாமல் கரண்டியை பயன்படுத்துங்கள். பிறகு எடுத்த மாவில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல மாவில் கைப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், சீக்கிரமாகவே புளித்துவிடும்.
- ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவில் பாத்திரத்தை வைக்கவும். இதனால் மாவு சீக்கிரமாகவே பிடிக்காது. மற்றொரு வழி என்னவென்றால், மாவு அறுத்த பிறகு ஒரு வாழை இலை கொண்டு மூடி வைக்க வேண்டும். இப்படி செய்தால் இரண்டு நாட்கள் மாவு புளிக்காமல் பிரெஷ்ஷாக இருக்கும்.