
Establishing a Sleep Routine for Kids: A Key to Better Development : குழந்தைகள் நன்றாக தூங்குவது அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அவசியமானதாகும். இரவு சரியான நேரத்திற்கு தூங்கி 9 மணி நேரத்திற்கு பின் காலையில் விழித்தால் அவர்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். அவர்களின் வளர்சிதை மாற்றம் மேம்படும். ஆனால் கோடை விடுமுறையில் சில குழந்தைகள் நள்ளிரவு வரை விளையாடிவிட்டு தூங்க அடம்பிடிப்பார்கள். அவர்களை சரியான நேரத்தில் எப்படி தூங்க வைப்பது என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம். நன்றாக தூங்கும் குழந்தைகள் தான் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைக்க பெற்றோருக்கு உதவும் சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தூங்கும் நேரம் நிர்ணயித்தல்;
தூங்குவதற்கு என்ன ஒரு நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடாது. இந்த விஷயத்தில் பெற்றோர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் குழந்தைகளை தூங்க வைக்க பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும். இரவில் 9 மணிக்கு குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு, காலை 7:00 மணிக்கு எழுப்புவதை பெற்றோர் வழக்கமாக்க வேண்டும். இப்படி ஒரே நேரத்தில் தூங்க வைப்பதால் அவர்களுடைய தூக்க சுழற்சி அதற்கு ஏற்றார் போல மாறிவிடும்.
இதையும் படிங்க: குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்- எப்படி தடுக்கனும் தெரியுமா?
மொபைல், டிவிக்கு குட் பை:
குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் மொபைல், டிவி ஆகியவற்றை பார்ப்பதை பழக்கப்படுத்த கூடாது. தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பதை தடை செய்ய வேண்டும். இதனால் அவர்களுடைய மனம் அமைதியாகி சீக்கிரம் தூங்கி விடுவார்கள்.
இதையும் படிங்க: தாய்க்கும் தந்தைக்கும் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கும் வர வாய்ப்பு உள்ளதா?
கதை சொல்லுங்கள்!
தினமும் தூங்குவதற்கு முன்பாக குழந்தைகளுக்கு கதை சொல்லுவதை வழங்கப்படுத்துங்கள். அவர்களுக்கு நன்னெறி விஷயங்களை கூறும் விதமாக ஏதேனும் ஒரு கதையை படித்துக் காட்டுங்கள். உங்களுக்கு கதை சொல்ல தெரியாதென்றால் அவர்களுடன் அமர்ந்து உரையாடுங்கள். அவர்கள் தூங்கும் வரை அவர்களுக்கு பக்கமாய் அமர்ந்து பாதுகாப்பாக உணரச் செய்யுங்கள். சீக்கிரம் தூங்குவார்கள்.
உணவு பழக்கம்:
இரவில் தூங்கும் முன் குழந்தைகளுக்கு மிதமான உணவுகளை வழங்குவது நல்லது. பால் அல்லது ஏதேனும் பழங்களை கொடுப்பதால் அவர்களுடைய வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் சீக்கிரமே தூங்கி விடுவார்கள்.
அன்பு காட்டுங்கள்:
குழந்தைகளிடம் எப்போதும் கடுகடுவென கோவமாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துமாறு கனிவாக நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் சொல்வதை குழந்தைகள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள்.