தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த '1' பொருள் போதும்; புதுசு மாதிரி ஜொலிக்கும்!!
தங்க நகைகள் அழுக்கு படிந்து இருந்தால் புதுசு மாதிரி ஜொலிக்க அதை வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தங்க நகைகள் அழுக்கு படிந்து இருந்தால் புதுசு மாதிரி ஜொலிக்க அதை வீட்டிலேயே எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Simple Ways To Clean Gold Jewellery At Home : தங்க நகைகள் மீது பெண்களுக்கு எப்போதுமே ஆசை இருக்கும். இதனால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல விதமான டிசைன்களில் தங்க நகைகளை வாங்கி வீட்டில் வைப்பார்கள். மேலும் தங்க நகைகளை அடிக்கடி பயன்படுத்தினால் அதில் அழுக்குகள் எண்ணெய்கள் படிந்து தங்கத்தின் நிறத்தை மங்க வைத்து விடுகிறது. சொல்ல் போனால் தங்கம் வாங்கியது போலவே ஜொலிப்பதில்லை.
இதனால் பல பெண்கள் தங்க தங்க கடைக்கு சென்று பாலிஷ் செய்கிறார்கள். ஆனால் அப்படி பாலிஷ் செய்யும்போது அதிலிருந்து சிறிதளவு தங்கம் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜெட் வேகத்தில் இருக்கும் தங்கத்தின் விலைக்கு இப்படி அதை பாலிஷ் செய்து குறைத்தால் எப்படிம்?! எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க வீட்டிலேயே மிக எளிதாக தங்கத்தை சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கிண்ணத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் மட்டும் டிஷ்வாஷ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதில் தங்க நகைகளை போடுங்கள். 15 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு தங்க நகைகளின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஓடும் நீரில் நகைகளை கழுவுங்கள். இறுதியாக ஒரு துணியால் தங்க நகைகளை ஒத்தி உலர்த்தவும்.
இதையும் படிங்க: வெறும் சோடா உப்பு போதும்!! கை வலிக்காம தீஞ்சு போன பாத்திரத்தை கழுவிடலாம்
ஒரு பெரிய கிண்ணத்தில் இளம் சூட்டில் இருக்கும் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் தங்க நகைகளை போடவும். சில நிமிடங்களிலேயே தங்க நகைகளில் இருக்கும் அழுக்குகள் எண்ணெய் பசை அகன்றிவிடும். மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை சுத்தம் செய்ய வேண்டும். பின் துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடம்! ஏசியை இப்படி கிளீன் பண்ணுங்க.. காத்து ஜில்லுனு வரும்!
டூத் பேஸ்ட்டை சிறிதளவு தொட்டுக்கொண்டு நகைகள் மீது மென்மையாக தேய்க்க வேண்டும். பிறகு ஒரு மெல்லிய துணி கொண்டு நகைகளை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நகைகளில் இருக்கும் தூசிகள் அழுக்குகள் வெளியேறிவிடும். பிறகு ஓடும் நீரில் நகைகளை நனைக்க வேண்டும்.. டூத் பேஸ் நகைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி ஜொலிக்க உதவும்.
முத்துக்கள் மென்மையானது என்பதால் சிறிதளவு சூடான நீரில் மென்மையான ஷாம்பு கலந்து ஒரு மென்மையான பிரஷ் கொண்டு நகைகளை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பவளம் பதித்த நகைகளை கடைகளில் தான் கொடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.