வெறும் சோடா உப்பு போதும்!! கை வலிக்காம தீஞ்சு போன பாத்திரத்தை கழுவிடலாம்
சமைக்கும்போது பாத்திரம் தீஞ்சு போனால் அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமைக்கும்போது பாத்திரம் தீஞ்சு போனால் அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Easy Tips For Cleaning Burnt Vessels : சமைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புபவர்கள். ஆனால் சில சமயங்களில் சமைக்கும்போது பாத்திரம் தீஞ்சு போய்விடும். தீஞ்சு போன பாத்திரத்தை சுத்தம் செய்வது உண்மையாகவே சவாலாக தான் இருக்கும். கை வலிக்க சுத்தம் செய்தாலும் அதில் படிந்து இருக்கும் கறை நீங்காது.
இத்தகைய சூழ்நிலையில், தீஞ்சு போன பாத்திரத்தை கை வலிக்காமல் வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: அடிப்பிடித்த பால் பாத்திரத்தை கழுவி சோர்வாக இருக்கிறீர்களா? தக்காளி வைத்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்..!!
இதற்கு முதலில் தீர்ந்து போன பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் பத்திரத்தில் படிந்திருக்கும் கரை எல்லாம் நீங்கி விடும். அந்த கறையானது தண்ணீருடன் கலந்து விடும்.
இதையும் படிங்க: கருகிப் போன பாத்திரத்தை ஈசியாக சுத்தம் செய்ய சிம்பிளான டிப்ஸ்!!
இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அழுக்காக இருக்கும் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பிறகு பாத்திரம் சூடாக இருக்கும் போதே அதில் கல் உப்பு மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விட் சேர்த்து நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இப்போது பார்த்தால் தீஞ்சு போன பாத்திரம் புத்தம் புதியது போல் இருக்கும்.