Excessive Ginger Intake : இஞ்சில நல்லதோட கெட்டதும் இருக்கு! எந்த அளவு பயன்படுத்தலாம்?

Published : Oct 06, 2025, 12:45 PM IST

இஞ்சி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. நீங்கள் தினமும் இஞ்சியை உட்கொள்ளும் நபர் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

PREV
17
Excessive Ginger Intake

இஞ்சி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். டீ முதல் வேறு எந்த உணவாக இருந்தாலும் சரி கட்டாயம் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி அதன் சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சளி, இருமல் முதல் செரிமான பிரச்சனை வரை போன்ற ஏராளமான நன்மைகளை இது கொண்டுள்ளன. இதனால் பல தினமும் இஞ்சியை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் இஞ்சியை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவுகள் தெரியுமா? இந்த பதிவில் இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

27
இரத்த போக்கு :

இஞ்சியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன அவை இரத்தத்தை மெலிதாகும். குறிப்பாக இரத்தம் மெலிந்து போகும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் அல்லது ஏற்கனவே இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

37
செரிமான அமைப்பு பாதிப்பு :

இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் மோசமான வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆய்வுகள் படி, இஞ்சியை அதிகமாக சாப்பிடுவது நெஞ்செரிச்சல், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உன்னிடம் வாய்ந்த உள்ளவர்கள் இது தீங்கு விளைவிக்கும்.

47
ஒவ்வாமை :

சிலருக்கு இஞ்சி ஒவ்வாமையை ஏற்படுத்தும். சொறி முதல் சுவாசிப்பதில் சிரமங்கள் வரை போன்றவை அதன் அறிகுறிகள் ஆகும். இஞ்சி சாப்பிட்ட பிறகு உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே இஞ்சி சாப்பிடுவதை நிறுத்திவிடவும். பிறகு மருத்துவரை சந்திக்கவும்.

57
குறைந்த இரத்த அழுத்தம்

இஞ்சி ரத்த ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையை கொண்டுள்ளன. எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது அதற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் இஞ்சியை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

67
கர்ப்ப காலத்தில் :

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை நோய் வாந்திக்கு இஞ்சியை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதை குறைவாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கருச்சிதைவு அல்லது கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே கர்ப்ப காலத்தில் இஞ்சியை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

77
கோடை காலம்

இஞ்சி சூடான தன்மையைக் கொண்டது. ஆகவே வெயில் காலத்தில் வெளியில் செல்லும்போது இஞ்சியை அதிகமாக உட்கொண்டால் வெப்பப் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories