மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் இரவு தூங்கும் போது போர்வையை அதிகமாக உபயோகப்படுத்துவோம். இல்லையென்றால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் தான் ஏற்படும். குளிரைத் போக்க போர்வையை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதை துவைத்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இந்த பதிவில் போர்வையை துவைக்காமல் பயன்படுத்தினால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
25
அலர்ஜி மற்றும் அரிப்பு
சிலரது வீடுகளில் செல்ல பிராணியாக நாய் பூனை வளர்ப்பார்கள். அவை தூங்கும் அறைக்கு அல்லது படுக்கை மீது கூட வரும் போது அதன் முடி கட்டாயம் தலையணை உறை மற்றும் போர்வையில் இருக்கும். அவற்றால் சருமத்தில் அலர்ஜி மற்றும் அரிப்பு ஏற்படும்.
35
தூக்கமின்மை
பொதுவாக போர்வையில் நம் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்ச்சியான சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் அதில் வேகமாக வளரும். அவற்றால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், தூக்கமின்மை பிரச்சினையும் அதிகமாக ஏற்படும். ஆகவே போர்வையை துவைக்காமல் ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.
வீடு சுத்தமாக இருந்து போர்வை அசுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இதன் விளைவாக மன அழுத்தம், எரிச்சல், தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
55
எப்போது போர்வையை துவைக்கணும்?
மேலே சொல்லப்பட்டுள்ள பாதிப்புகள் வரக்கூடாது என்று நினைத்தால் நீங்கள் பயன்படுத்தும் போர்வையை கட்டாயம் வாரத்திற்கு ஒருமுறை துவைக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். நீங்கள் துவைக்காமல் போர்வையை பயன்படுத்தினால் அதில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். இதனால் தொற்று நோய்களுக்கு ஆளாவீர்கள்.