சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சில பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இப்போதெல்லாம் சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இது ஏற்படுகிறது. சர்க்கரை நோய்க்கு நிரந்தர சிகிச்சை ஏதுமில்லை. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்போதுதான் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த பதிவில் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க கூடிய அந்த பானங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
24
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை அதிக அளவு உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். வேண்டுமானால் சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை பழமாக கூட சாப்பிடலாம். ஏனெனில் அதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.
34
மாதுளை ஜூஸ்
மாதுளம் பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மாதுளை ஜூஸ் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அது நல்லதல்ல. ஆகவே சர்க்கரை நோயாளிகள் மாதுளை ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக அதை பழமாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக விதைகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது செரிமான அமைப்பை மேம்படுத்தும். வயிற்று பிரச்சனைகளை போக்கும்.
இந்த திராட்சை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருப்பதால் பலரும் அதை விரும்புகிறார்கள். மேலும் இந்த திராட்சையில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைக்கும் என்றாலும், இந்த திராட்சையின் சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் இதில் சர்க்கரை உள்ளடக்கமும் அதிகம். அது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். இந்த பழத்தை ஜூஸாக குடித்தால் அதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து வீணாகும். ஆக மொத்தத்தில் சிவப்பு திராட்சை சாறு ஆரோக்கியத்திற்கு நன்மையை விட தீமை தான் அதிகம் செய்யும் என்று சொல்லப்படுகின்றது.
இந்த பதிவு பொதுவான தகவல் என்பதால், உங்களுக்கு ஏதேனும் இது குறித்து சந்தேகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.