Mushroom Side Effects: காளான் உடலுக்கு நல்லது தான்..ஆனால், அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை இருக்கா..?

First Published | Sep 4, 2022, 11:15 AM IST

Mushroom Side Effects: காளான் சாப்பிடுவது உடலுக்கு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகளும்  உடலுக்கு அதிகம் வரும்.

Mushroom Side Effects:

காளான் இன்று பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. குறிப்பாக சைவ உணவு பிரியர்கள் பீட்சா, சூப் அல்லது காளான்களில் செய்யப்படும் காளான் பிரியாணி, காளான் ரைஸ், காளான் வறுவல், காளான் குழம்பு எந்த உணவாக இருந்தாலும் சரி அது மிகவும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. உணவுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் காளான் உதவுகிறது.

Mushroom Side Effects:

அந்த வகையில், இதய நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், கல்லீரல் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை காளானில் உள்ளது. அதுமட்டுமின்று, ஆண்டி பாக்டீரியா தன்மை கொண்ட காளான் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. அதே சமயம், காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. எனவே, வாரத்திற்கு இரண்டு முறை காளான் சாப்பிடும், பிரியர்களின் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்..

மேலும் படிக்க...Sukran peyarchi: சுக்கிரன், சூரியன் சேர்க்கை..அடுத்த இரண்டு வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..செல்வம் பெருகும்

Mushroom Side Effects:

காளான்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இது பதட்டத்தை அதிகரிக்கிறது. இது லேசானது முதல் தீவிர நிலை வரை இருக்கும்.அதேபோன்று, குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் சாப்பிடும்போது மயக்கம் கூட ஏற்படலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும்  கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் காளான்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க...Sukran peyarchi: சுக்கிரன், சூரியன் சேர்க்கை..அடுத்த இரண்டு வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..செல்வம் பெருகும்

Mushroom Side Effects:

காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். எஎனவே,வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்..

Mushroom Side Effects:

காளான் தோல் சுருக்கம், முகத்தில் கோடுகள் போன்ற வயது முதிர்வுக்கான பிரச்சனைகளை தடுக்கிறது. இருப்பினும், சிலருக்கு காளான் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, சரும அலர்ஜி, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

Mushroom Side Effects:

நாம் சாதாரணமாக உட்கொள்ளும் காளானை தவிர்த்து, அபின், கஞ்சா போன்று போதை தரக்கூடிய காளான் வகைகளும் உண்டு. அது மேஜிக் மஷ்ரும் என்று அழைக்கப்படுகின்றன. இதனை சாப்பிடுவோருக்கு நிதானம் தவறுதல், தன்னிலை மறத்தல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.இருப்பினும், இவை தடை செய்யப்பட்டுள்ளன..

மேலும் படிக்க...Sukran peyarchi: சுக்கிரன், சூரியன் சேர்க்கை..அடுத்த இரண்டு வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..செல்வம் பெருகும்

Latest Videos

click me!