முதலில் அதற்கு நீங்கள் ஒரு கிலோ முழு பூண்டை எடுத்து, ஒரு துணியில் வைத்து சுருட்டி, ஒரு கட்டையை வைத்து அடித்தால் கூட சுலபமாக அது நமக்கு பிரிந்து கிடைத்து விடும். பூண்டின் அளவு குறைவாக இருந்தால், கைகளை கொண்டும் பிரித்து கொள்ளலாம். பிறகு எல்லா பூண்டையும் ஒரு முறத்தில் கொட்டி புடைத்தால், மேலே இருக்கும் லேசான தோலை நீக்கிவிட்டு பூண்டு பற்களை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்களாம்.