இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் நிறைந்தது. இதனை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணவோடு சேர்த்துக் கொண்டால், உடலுக்கு குளிர்ச்சியை தரும்.. பெரும்பாலும், குழந்தைகளுக்கு கீரையை கடைந்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். ஆனால், சற்று வித்தியாசமான முறையில் பாலக்கீரையில் இப்படி பூரி சுட்டு கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும், அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படியாக, பாலக்கீரையில் பூரி எப்படி சுடுவது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
1. முதலில் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து, கீரை மூழ்கும் அளவிற்கு 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பின்னர், அந்த தண்ணீரில் பச்சை மிளகாய் 2, சுத்தம் செய்த கீரையை போட்டு, 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
2. கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர், கீரையை தனியாக எடுத்து ஒரு தட்டில் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
33
Palak Keerai Puri Recipe:
3. பின்னர், ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு 2 கப், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த இந்த கீரையை மாவில் ஊற்றி முதலில் நன்றாக பிசையுங்கள்.
4. பின்னர், தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் இந்த மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். சேர்த்து அவ்வளவு தான் சுவையான பாலக்கீரை பூரி ரெடி..! கூடவே உருளைக்கிழங்கு குருமா, காலிபிளவர் குருமா செய்து பரிமாறுங்கள்..