guava
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தருகிறது. கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
guava
வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்
கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், நார்ச்சத்து நிறைந்த கொய்யா, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால், அதிகப்படியான கொய்யா உண்பது உங்கள் செரிமானத்தை பாதிக்கும்.
சளி இருமல் பிரச்சனை:
சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
World Blood Donor Day
நீரிழிவு நோயாளிகள்
கொய்யாப் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கொய்யாவை நீங்கள் தினசரி சாப்பிட்டாலோ அல்லது அதிகமாக சாப்பிட்டாலோ, உங்கள் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.
இதய பாதிப்பு
ஒரு சில நோயாளிகளுக்கு கொய்யா சாப்பிடுவது, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.குறிப்பாக, இதய பாதிப்புகள் கொண்டவர்கள், கொய்யாவைத் தவிர்க்க வேண்டும்.