Bun dosa
மாவு அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
2 கப் பச்சரிசி
அரை ஸ்பூன் வெந்தயம்
ஒரு கப் அவல்
ஒரு கப் துருவிய தேங்காய்
உப்பு தேவையான அளவு
தாலிப்பதற்கு தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு கடுகு
ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு
3 பச்சை மிளகாய்
ஒரு கொத்து கருவேப்பிலை
Bun dosa
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி, வெந்தயம் என இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
அரிசி நன்றாக ஊறியதும் தண்ணீரை முற்றிலும் வடிகட்டி கிரைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும். மாவு நன்றாக அரைத்ததும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்து வைக்கவும்.
பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் அவல், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
அதை அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
Bun dosa
தோசை மாவு புளித்ததும், தாளிப்பு தயார் செய்ய வேண்டும்.
மாவை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் பொடி மற்றும் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொரியவிட வேண்டும்.
இந்த தாளிப்பை, தோசை மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, அடுப்பில் வைத்து ஆப்பக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி, ஒரு கரண்டி தோசை மாவை பரப்பாமல் அப்படியே ஊற்ற வேண்டும். ஒரு மூடி வைத்து மிதமான சூட்டில் சுமார் 3 நிமிடங்கள் வேக விடவும். பிறகு திருப்பி போட்டு மறுபுறமும் வேக வைக்கவும்.
நன்றாக தோசை வெந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி எடுத்தால் பஞ்சு போன்ற மிருதுவான, சுவையான பன் தோசை ரெடி. இதனுடன், தேங்காய் சட்னி அல்லது சாம்பருடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.