எச்சரிக்கை!! வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடித்தால் இப்படி ஒரு பிரச்சனை வரும்!!

Published : Dec 03, 2024, 10:10 AM IST

 Turmeric Milk Side Effects : காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

PREV
16
எச்சரிக்கை!! வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடித்தால் இப்படி ஒரு பிரச்சனை வரும்!!
Turmeric Milk Side Effects In Tamil

பொதுவாக காலையில் எழுந்தவுடன் நம்மில் பலர் பால் குடிக்க விரும்புவார்கள். அதிலும் சிலர் பாலில் மஞ்சள் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பார்கள். ஆனால் இப்படி குடிப்பது நல்லதல்ல என்றும், இதனால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் சமீபத்திய ஆராய்ச்சி சொல்கின்றது. எனவே காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

26
Turmeric Milk Side Effects In Tamil

வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

செரிமான பிரச்சனை

காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் செரிமான அமைப்பில் பிரச்சனை ஏற்படும். இது வயிற்றில் அதிக இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்கின்றது. இதனால் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக உணர்திறன் செரிமான அமைப்பு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பது நல்லதல்ல.

36
Turmeric Milk Side Effects In Tamil

ஒவ்வாமை

மஞ்சள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதை பாலில் கலந்து குடித்தால் சிலருக்கு உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேலும் இது தோல் வெடிப்பு மற்றும் சுவாச பிரச்சனையையும் ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

இதையும் படிங்க: இப்படி பால் குடித்தால் உடல் 'எடை' அதிகமாகும் தெரியுமா?

46
Turmeric Milk Side Effects In Tamil

இரத்தப்போக்கு ஏற்படும்

மஞ்சள் இயற்கையாகவே இரத்தத்தை மெல்லியத் தாக்கும். மேலும் இது சிலது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். சில சமயங்களில்,   இதனால் ரத்தப்போக்கு ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு 'இனியும்' வெறும் பால் வேண்டாம்.. இந்த பொருள்களில் '1' போட்டு கொடுக்குறது தான் நல்லது!!

 

 

56
Turmeric Milk Side Effects In Tamil

ஹார்மோன் மாற்றங்கள்

வெறும் வயிற்றில் பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முக்கியமாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜா ஹார்மோனில் மாற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது மாதவிடாய் காலத்தில் மாற்றங்கள் ஏற்படும். எனவே மஞ்சள் பால் குடிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

66
Turmeric Milk Side Effects In Tamil

மருந்துகளால் பிரச்சனை

நீங்கள் பிபி சர்க்கரை நோய் இதய நோய் போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டால், அதே சமயம் மஞ்சள் பால் குடிக்கும் போது அது எதிர்மறையான விளைவே ஏற்படுத்தும். இதனால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும். எனவே மஞ்சள் பால் குடிக்கும் முன் மருத்துவ வரை அணுகவும்.

Read more Photos on
click me!

Recommended Stories