பவர் வாக்கிங் செய்யும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
பவர் வாக் செய்வது மிகவும் சுலபம் என்றாலும், இந்த நேரத்தில், சில விசேஷங்களை கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை..
1. பவர் வாக்கிங் செய்யும் போது உடல் நிமிர்ந்து சீரான வேகத்தில் நடக்க வேண்டும்.
2. நீங்கள் முதல்முறையாக பவர் செய்யும் போது உங்களுக்கு வேகமாக நடப்பது சிரமம் இருந்தால் நீங்கள் முதலில் 5 முதல் 6 மீட்டர் தூரம் வரை நடந்து செல்லுங்கள். அதன் பிறகு படிப்படியாக உங்களது நேரத்தை அதிகரிக்கவும். மேலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் பவர் வாக் செய்ய வேண்டும்.
3. பவர் பேக் செய்யும் போது நீங்கள் உங்களது கண்களை முன்பக்கமாக வைக்க வேண்டும். இது உங்கள் தோரணையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி முழு உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
4. இவை அனைத்தையும் தவிர, முக்கியமாக நீங்கள் பவர் வாக் செய்யும்போது வாயை மூடிக்கொண்டு மூக்கின் வழியாக தான் சுவாசிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரைவில் நீங்கள் சோர்வடையாமல் நீண்ட நேரம் நடப்பீர்கள்.