
சுவிட்சர்லாந்து என்று சொன்னாலே அதன் பனி போர்த்திய அழகிய மலைகள் தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் இந்தியாவில் உள்ள சில இடங்கள் ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகின்றன. அற்புதமான ஆல்பைன் நிலப்பரப்பு, பசுமையான புல்வெளி மற்றும் சுவிட்சர்லாந்தை நினைவூட்டும் அழகிய இயற்கைக்காட்சிகள் ஆகியவை தான் இதற்கு காரணம்.
இந்தியாவை விட்டு வெளியேறாமல் சுவிஸ் அனுபவத்தைத் தேடுபவர்களுக்கு இந்த இடங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் 9 இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜ்ஜியார், இமாச்சல பிரதேசம்
பசுமையான புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் பிரம்மிப்பூட்டும் இயற்கை அழகைக் கொண்ட இந்த இடம் பெரும்பாலும் 'இந்தியாவின் சிறிய சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. குதிரை சவாரி, நடைபயணம் மற்றும் பிக்னிக் ஆகியவை அதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
அவுலி, உத்தரகாண்ட்
உத்தரகாண்டின் கர்வால் இமயமலையில் அமைந்துள்ள அவுலி பனிச்சறுக்கு சுற்றுலா தலமாகும். இது குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாக மாறும். இந்த இடம் பனிச்சறுக்கு விளையாட்டின் சொர்க்கமாக கருதப்படுகிறது.
யும்தாங் பள்ளத்தாக்கு, சிக்கிம்
சுவிட்சர்லாந்தை ஓரளவு பிரதிபலிக்கும் ஆல்பைன் மலர்களுக்காக அறியப்பட்ட மற்றொரு அழகான இடமாகும். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இமயமலையின் அமைதியை விரும்புபவர்களுக்கு பனி மூடிய சிகரங்கள், வெந்நீர் ஊற்றுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
நந்தா தேவி மற்றும் பிற இமயமலைச் சிகரங்களின் சிறந்த பனோரமிக் காட்சிகளைப் பெற, கௌசனிக்குச் செல்ல வேண்டியது அவசியம். பின்னணியில் உள்ள இந்த மலைகள் நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருப்பதை போல் உணரவைக்கும்.
பரோட் பள்ளத்தாக்கு, ஹிமாச்சல பிரதேசம்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பரோட் பள்ளத்தாக்கு, பசுமையான மலைகள் மற்றும் உயரமான பைன் மரங்கள் என சுவிஸ் போன்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. மீன்பிடியில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சாகச ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் ஆகும்.
சோப்தா, உத்தரகண்ட்
பெரும்பாலும் 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் சோப்தா, பசுமையான ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்ட ஒரு மறைக்கப்பட்ட ரத்தினமாகும். ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.
காஷ்மீர்
பெரும்பாலும் 'பூமியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் காஷ்மீர், தால் ஏரி, பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய மலை சிகரங்களுடன், இயற்கை எழில் கொஞ்சும் அடிப்படையில் சுவிட்சர்லாந்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
முன்சியாரி, உத்தரகாண்ட்
இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம். பஞ்சசூலி சிகரங்கள் மற்றும் பனிப்பாறைகளின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது. இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கும் மலையேறுபவர்களுக்கும் ஏற்ற இடமாகும்..
கூர்க்
ஆண்டு முழுவதும் இதமான வானிலை மற்றும் மறக்க முடியாத அனுபவங்களுடன், இந்த இடம் சுவிட்சர்லாந்து போன்ற அனுபவங்களையும் வழங்குகிறது. மசாலா, ஏலக்காய், காபி, மிளகாய், தேன் மற்றும் மெல்லிய சந்தனம் ஆகியவற்றின் நறுமணத்தை அனுபவிக்கவும் இந்த இடம் உதவும்.