
அதிக நேரம் மொபைல், கணினி போன்றவற்றை பார்ப்பது இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சாதாரணமாகிவிட்டது. சிலர் வேலை நிமித்தமாக மணி கணக்கில் கணினியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. இவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரி முறை 20 அடி தூரத்தில் உள்ளவற்றை பார்க்க வேண்டும். அப்போது 20 வினாடிகள் கண்களை சிமிட்ட வேண்டும். இதை செய்வதால் கண்கள் வறண்டு போவதைத் தடுக்கலாம்.
எப்போதும் கணினியை மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் கண்களில் வறட்சி, வலி, கண்கள் சிவந்து போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க கண்ககுக்கு ஏற்ற கண்ணாடிகள் அணிந்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விழி வெண்படல அழற்சி என சொல்லப்படுகிற கண் நோயானது பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை எல்லோருக்கும் வரக் கூடியது. கண்களுடைய வெள்ளைப் பகுதிகளில் இந்த பாதிப்பு தோன்றுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் கலங்கிய மாதிரி இருக்கும். வைரஸ் அல்லது பாக்டீரியா இந்நோயை ஏற்படுத்தலாம். இந்த நோயை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தால் ஒரு வாரத்திற்கும் மேலாக பிரச்சனை தான். இந்த நோய் உள்பட கண்களை பராமரிக்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
குளிர்ந்த நீர்: அதிக நேரம் கணினி பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இந்த நேரத்தில் தான் கழுவ வேண்டும் என்றில்லை. காலை, மாலை அல்லது இரவில் கண்களை கழுவுவது நல்லது. குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) நனைத்த துணியினை கண்களை மூடி இமைகள் மீது வையுங்கள். இதை செய்வதால் கண்கள் ரிலாக்ஸாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியை உணரும்.
இதையும் படிங்க: என்ன மழைநீர் பார்வையை பாதிக்குமா? கண்களை பாதுகாக்க 'இத' கட்டாயம் பண்ணுங்க..!
கண் வலி நீங்க டிப்ஸ்:
வில்வம் மரத்தில் உள்ள இளம் தளிரை வதக்கி அதை ஒரு துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள். இந்த இளஞ்சூட்டில் கண்களில் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் கண்வலி குறைய வாய்ப்புள்ளது.
கருவேலம் மரத்தின் கொழுந்து இலைகளை சீரகம் போட்டு மையாக அரைத்து எடுங்கள். உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் கண் மீது அரைத்த கலவையை வையுங்கள். இதன் மீது வெற்றிலையை வைத்து மென்மையான துணியால் கண்களை கட்டிவிடுங்கள். இப்படி இரவில் கட்டினால் காலையிக் தான் அவிழ்க்க வேண்டும். இதை தொடர்ந்து 3 நாட்கள் செய்தால் வலி நன்றாக குறையும்.
காய்ந்த கொத்தமல்லியை ஒரு கைப்பிடு எடுத்து நீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். இதை வடிகட்டி குளிர்ந்த பின் கண்களை கழுவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களில் உள்ள வீக்கம், எரிச்சல், வலியைக் குறைக்க உதவும்.
கண் நோய் குறைய!
மிளகு, அருகம்புல் சமூலம், சீரகம் போன்றவற்றை நன்கு பொடியாக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட வேண்டும். இதை 15 நாட்கள் வெயிலில் வைத்து அதன் பின் தலைக்கு தேய்த்தால் கண் நோய்கள் வருவது கணிசமாக குறையும்.
ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன் எடுத்து நீரில் கலக்கி கொள்ளவும். இந்த நீரை கொஞ்சமாக பஞ்சில் தொட்டு கண்களைத் துடைத்தால் கண்களில் உள்ள தொற்று நோய்கள் நீங்கும்.
இதையும் படிங்க: இறந்த பின்னர் எத்தனை மணி நேரம் கழித்து கண் தானம் செய்யலாம்?
கண்ணில் சிவப்பு நீங்க!
அதிமதுரம், செண்பகப்பூ, ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். இதனை தண்ணீர் சேர்த்து அரையுங்கள். மையாக அரைத்த இந்த பேஸ்டை கண் இமைகள் மீதும், கண்களின் கீழும் பத்து போல போட வேண்டும். 1 மணி நேரத்திற்கு பின் குளிந்த நீரில் அதை கழுவினால் கண் சிவப்பு நன்கு குறையும்.
புளியம்பூக்களை மையாக அரைத்து அதை கண்ணை சுற்றி பற்று போல போடுவதால் கண்வலி குறையும். கண்ணில் காணப்படும் சிவப்பு நன்கு குறையும்.