பச்சைப் பாலால் முகத்தை கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள் :
சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
உங்களுக்குத் தெரியுமா? நமது சருமத்திற்கு பச்சைப் பால் ஒரு இயற்கையான மாய்சுரைசர் போல செயல்படுகிறது. இதனால் முகத்தை கழுவுவதால் சருமம் ஹைட்ரேட் ஆகும். மேலும் வறண்டு போகாமல் இருக்கும். பச்சைப் பாலில் உள்ள புரதங்கள், கொழுப்புகள் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
சருமத்தை சுத்தப்படுத்துகிறது
நமது சருமத்திற்கு இயற்கை எண்ணெய்கள் மிகவும் அவசியம். இவை இருந்தால்தான் நமது முகம் ஹைட்ரேட்டாக இருக்கும். இருப்பினும், நாம் பச்சைப் பாலால் முகத்தை கழுவினால் இந்த இயற்கை எண்ணெய்கள் போகாமல் சருமத்தில் படிந்துள்ள தூசி, அழுக்கு, அசுத்தங்கள், அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கும். பச்சைப் பால் சரும துளைகளை நன்றாக சுத்தம் செய்கிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.