
குழந்தைகளுக்கு கல்வி முக்கியமானது. கல்வி ஒருவரை பண்படுத்துகிறது. இக்காலத்தில் பெற்றோர் வேலைக்கு செல்வதாலும், சில காரணங்களாலும் குழந்தைகளை வீட்டில் வளர்க்க சிரமமாக உள்ளது. குழந்தைகளுக்கு படிப்பில் பெற்றோரும் உதவ வேண்டியுள்ளது அவசியமாகிறது. அதனால் குழந்தைகளை சில பெற்றோர் விடுதிகளில் சேர்த்துவிடுகின்றனர்.
காலையில் குழந்தையை எழுப்பி படிக்க வைப்பது, அவர்களுக்கு நேரத்திற்கு உணவு கொடுத்து பள்ளிக்கு அனுப்புவது பெற்றொரின் கடமையாகும். பள்ளி முடிந்து வந்ததும் டியூசன் அனுப்புவது குழந்தையின் படிப்பை மேம்படுத்தும். குழந்தைகள் படிப்பிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சரி செய்ய வேண்டும்.
குறிப்பாக 10,12ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்துவது தான் அவர்கள் மதிப்பெண்ணை உயர்த்தும். இந்த அழுத்தத்தை கையாள முடியாமல் சில பெற்றோர் குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லது செய்ய நினைத்து அவர்களை விடுதியில் சேர்த்துவிடுவார்கள். இதனால் குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும் என பெற்றோர் நம்புகிறார்கள்.
ஆனால் குழந்தைகளை விடுதியில் படிக்க வைப்பது அவ்வளவு நல்ல முடிவல்ல. குழந்தைகளை வீட்டில் தான் வளரவிட வேண்டும். பெற்றோர் நடவடிக்கைகளை பார்த்து வளரும் குழந்தைகள் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ள கூடியவராக வளர்வார்கள். பெற்றோரை பார்த்து குழந்தைகள் தங்கள் ஆளுமையை வளர்த்து கொள்வார்கள். குழந்தைகள் பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கொண்டு வளரும்போது பாதுகாப்பாக உணர்வார்கள்.
குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவின் அன்பும் அக்கறையும் தேவைப்படும். அவர்களோடு இருக்கவேண்டும் என்ற உணர்வு குழந்தைகளுக்கு தோன்றும். பெற்றோருடன் அவ்வப்போது வெளியே செல்லலாம். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே நல்ல பிணைப்பு இருக்கும். விடுதியில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை
விடுதியில் வளரும் குழந்தைகள் விதிகளுடன் வாழ வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அவர்களின் வேலையை அவர்களே செய்யவேண்டும். உணவும் அதுமாதிரிதான். வீட்டில் மாதிரொ விடுதியில் உணவுகளும், தின்பண்டங்களும் கிடையாது. வீட்டில் உள்ள சுதந்திரம் விடுதியில் இருக்காது. இப்படி கட்டுப்பாடுகளுடன் வளரும் குழந்தைக்கு ஆளுமை குறைபாடுகளும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
விடுதிதில் வளரும் குழந்தைகளுக்கு வெளியுலகில் உள்ள விஷயங்கள் முழுமையாக பழக்கப்படுவதில்லை. சிலர் அதீக கோபம் உள்ளவர்களாகவும், சிலர் மென்மையானவர்களாகவும் மாறிவிடுகின்றனர். வீட்டில் வளரும் குழந்தைகளை போல அவர்கள் வாழ்க்கை நடைமுறைகளை தெரிந்து கொள்வதில்லை.
பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாக விடுதி குழந்தைகள் மாறிவிடுகிறார்கள். சொந்தக்காரர்கள் மீதும் அவர்களுக்கு அதிகம் பற்று இருப்பதில்லை. அவர்களை மதிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றுவதில்லை. தன்னை பற்றி மட்டும் அதிகம் யோசிக்கும் குணமுள்ளவர்களாக மாறிவிடுகிறார்கள். மற்றவர்களின் உணர்வுகள் குறித்து எந்த சிந்தனையும் இருப்பதில்லை. குழந்தைகளின் ஆளுமையும், குணங்களையும் விடுதிகள் மாற்றிவிடலாம்.
இதையும் படிங்க: பெற்றோர் - குழந்தை உறவில் விரிசல் வர இந்த '1' மோசமான பழக்கம் தான் காரணம்
விடுதியில் இத்தனை குறைபாடுகள் இருந்தாலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் குழந்தைகளை விடுதியில் சேர்ப்பது தவறு இல்லை. பெற்றோர் தங்களுடைய சூழ்நிலைகளைப் பொறுத்து குழந்தைகளை விடுதியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் விடுதியில் சேர்ப்பதால் வரும் எதிர்மறை விளைவுகளையும் சரி செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தவறான வளர்ப்பு முறையால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் 'இப்படி' 1 நோய் வருமாம் தெரியுமா?
சில ஊரில் நல்ல பள்ளியோ அல்லது கல்வி சார்ந்த வசதிகளோ குறைவாக இருக்கும். சிலர் வெளிநாடு அல்லது வெளியூரில் இருக்கலாம். சில வீடுகளில் குழந்தைகள் வளர சரியா சூழல் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக தந்தை அதிகம் குடிப்பவராக இருக்கலாம். பெற்றோரில் ஒருவர் இல்லாமல் இருக்கலாம். இந்த மாதிரியான காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை. தவிர்க்கவே முடியாத காரணங்களுக்காக குழந்தை விடுதியில் சேர்ப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் உரிய காரணங்கள் இல்லாமல் பெற்றோர் தங்களுடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க குழந்தைகளை விடுதியில் தள்ளுவது சரியான முடிவல்ல. அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.