side effects of eating ice cream in winter
குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. குளிர்ந்த காற்று வீசத்த தொடங்குகிறது. இந்த சீசனில் சூடான ஆடைகள் அணிவோம். மேலும் சூடான உணவுகளையே சாப்பிடுவோம். இதனால் நாம் நோய்வாய்ப்படும் ஆபத்து குறையும்.
side effects of eating ice cream in winter
இருப்பினும், சிலர் குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். அதே சமயம் இன்னும் சிலர் குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி இருமல் காய்ச்சல் வந்துவிடும் என்று நினைத்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் உண்மையில் குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லதா.. இல்லையா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
side effects of eating ice cream in winter
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்வது நல்லதல்ல. ஆனால் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் மற்றும் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.
இதையும் படிங்க: Kulfi : குளு குளு வென்று "குல்ஃபி ஐஸ்" செய்யலாம் வாங்க!
side effects of eating ice cream in winter
ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:
செரிமான பிரச்சினை ஏற்படும்:
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் வயிறு வீக்கம் பிடிப்பு போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் செரிமான பிரச்சனைகளும் வரும்.
தொண்டைப்புண் வரும்:
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர் பொருட்களை சாப்பிட்டால் தொண்டையில் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
side effects of eating ice cream in winter
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்:
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக நீங்கள் பலவகையான நோய்களுக்கு இரையாகுவீர்கள்.
ரத்த ஓட்டம் சீராக நடக்காது:
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களை சாப்பிட்டால் உடலில் வெப்பநிலை குறையும் இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடக்காது.