
குளிர்காலம் உடலுக்கு இதமாக இருந்தாலும் பலவிதமான உடல் கோளாறுகளை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். மேலும் இந்த சீசனில் ஆஸ்துமா, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளும் மோசமடையும். அதிலும் குறிப்பாக சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த சீசன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சைனஸ் என்றால் என்ன?
சைனஸ் என்பது முகத்தில் இருக்கும் எலும்புக்குள் அமைந்திருக்கும் வெற்று குளியாகும். இந்த பகுதிதான் நாம் சுவாசிக்கும் காற்றை வடிகட்டுகிறது மற்றும் அதற்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது இதுபோன்ற பல விஷயங்களை செய்கிறது. மேலும் இந்த இடத்தில் ஒருவகை சவ்வு உள்ளது. இந்த சவ்வில் ஏதேனும் தொற்று நோய் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் அதனால் சைனஸ் பிரச்சினை வரக்கூடும்.
இதையும் படிங்க: வலது பக்கத்தில் தலைவலி வந்தா அசால்டா இருக்காதீங்க! காரணம் இதுதான்!!
சைனஸ் பிரச்சனையால் மூக்கடைப்பு, முகவற்றில் வலி, அழுத்தம் மற்றும் தலை வலி போன்றவை ஏற்படும். இவை பொதுவான அறிகுறிகள் ஆகும். அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் சைனஸ் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும். எனது இதை தவிர்க்க சில வீட்டு வழிமுறைகள் இங்கே உள்ளன. அது பற்றி இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: தலைவலி தானேன்னு கவனிக்காம இருக்காதீங்க.. பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்..
குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி?
ஆவி பிடிக்கவும் : பொதுவாக காய்ச்சல் சளி இருக்கும் போது ஆவி பிடிப்போம். ஆனால் குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஆவி பிடித்து வந்தால் தலை மற்றும் மூக்கில் இருக்கும் சளி கொஞ்சம் கொஞ்சமாக உருகி வெளியேறும்.
நீரேற்றமாக இருங்கள் : குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் நீரேற்றமாக இருக்க வேண்டும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். அதிலும் குறிப்பாக சூடான நீரை குடித்து வந்தால் சளி பிடிக்காது. இதனால் சைனஸ் பிரச்சனையும் வராது. இது தவிர சூடான நீரில் குளிப்பதும் நல்லது.
சுத்தமாக வை : குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தங்களது வீட்டில் போதுமான அளவு வெளிச்சம் மற்றும் காற்று இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுபோல, வீட்டில் தூசிகள் இருந்தால் அதை உடனுக்குடனே அகற்றி விடுங்கள்.
போதுமான அளவு தூக்கம் : சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இரவில் நன்றாக தூங்கினால் இந்த பிரச்சனைகள் குறையும். அதுபோல இரவு தூங்கும் போது உயரமான தலையணையை பயன்படுத்தினால் சைனஸ் பிரச்சனை குறைகின்றது.
இதையும் செய் :
- சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் குளிர்காலத்தில் உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் பூண்டு சளியை நீக்கி சைனஸ் பிரச்சனையை குறைக்கும்.
- அதுபோல தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அலர்ஜி குறையும்.
- குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனை வராமல் தடுக்க தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிட வேண்டும். இஞ்சியில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சைனஸ் பிரச்சினையே வராமல் தடுக்கும்.